மனைவியைக் கொன்றதால் மகிழ்ச்சி – கள்ளக்காதலால் வந்த விபரீதம்

police_station_2666628f

தாம்பரம் அருகே உள்ள அகரம் தென் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கணபதி (26).இவரது மனைவி கவுரி (23). திருமணமாகி 8 வருடங்கள் ஆன இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்–மனைவி இருவரும் தாம்பரம் நகராட்சியில் தனியார் நிறுவன ஒப்பந்தத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

கவுரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதன் காரணமாக கணபதிக்கும், கவுரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குடிபோதையில் வரும் கணபதி மனைவியை அடித்து துன்புறுத்தினார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கவுரி மாயமானார். இதுபற்றி கணபதி தாம்பரம் போலீசில் புகார் செய்தார். நேற்று கவுரி தாம்பரத் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்த கவுரி, கணவன் கொடுமை பற்றி புகார் கொடுத்தார். ‘‘எனது கணவர் குடிபோதையில் என்னை அடித்து துன்புறுத்துகிறார். அவரிடம் இருந்து எனது குழந்தைகளை மீட்டு தாருங்கள்’’ என்று புகார் கூறியிருந்தார்.

மனைவி மாயமானதாக புகார் செய்து இருந்ததால் போலீசார் கணபதியிடம் உனது மனைவி உன்னை பற்றி புகார் கொடுத்து உள்ளார். விசாரணை செய்ய வேண்டியது இருப்பதால் நீ போலீஸ் நிலையம் வா’’ என்று அழைத்துள்ளனர்.

நேற்று மதியம் 3 மணி அளவில் போலீஸ் நிலையம் வந்த கணபதியை வெளியே காத்திருக்கும்படி போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் நிலையத்தில் மனைவி இருப்பதை அறிந்த கணபதி ஆவேசம் அடைந்தார். என்னை பற்றியா புகார் கொடுக்கிறாய் என்று மனைவியிடம் தகராறு செய்தார்.

திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து அவரது மார்பில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கவுரியை போலீசார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

பெண் போலீசார் முன்னிலையிலேயே போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கணபதியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு போலீசாரிடம் ‘‘எனது மனைவி எப்படியிருக்கிறார்?’’ என்று கணபதி கேட்டார். அவர் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதைக்கேட்டு கணபதி கதறி அழுவார் என நினைத்த போலீசாருக்கு அவர் கூறிய தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனது மனைவி இறந்ததால் எனக்கு வருத்தமே இல்லை. அவர் பிழைத்திருந்தால் இன்னும் பல குத்து விட்டிருப்பேன். அவர் இறந்ததால் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

கணபதி தன் வாயால் கூறியதாவது – எனது மனைவிக்கு கார்த்திக் என்ற வாலிருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த நான் அவளை மன்னித்து ஏற்றுக்கொண்டேன். ஆனாலும் அவள் கள்ளக்காதலை விடவில்லை.

சம்பவத்தன்று நான் எனது மூத்த மகனுடன் சபரிமலைக்கு சென்றேன். திருச்சி சென்று இருக்கும்போது என் மனைவி கள்ளக்காதலனுடன் சுதந்திரமாக திரிவதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதனால் நான் சபரிமலைக்கு செல்லாமல் சென்னை திரும்பினேன். அவரை கொலை செய்ய 100 ரூபாய் கொடுத்து ஸ்குருடிரைவர் வாங்கினேன். அதனை பட்டைதீட்டி கூர்மையாக்கி மறைத்து வைத்திருந்தேன்.

போலீஸ் நிலையத்தில் அவள் என்னை பற்றி புகார் செய்ய வந்ததை கண்டு ஆத்திரம் அடைந்து அவளை குத்திக்கொன்றேன். அவள் இறந்ததால் இப்போது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு கணபதி கூறினார்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.