மாதவிலக்கு பிரச்சினைகளை தீர்க்கும் செம்பருத்தி பூ

download

தமிழகம் எங்கும் பரவலாக அனைத்த விடுகளிலும் வளரக்கூடிய பூ தரும் குறு மரங்களாக இந்த செம்பருத்தி உள்ளது.  சிவப்பு நிறப்பூக்கள் மற்றும் வெள்ளை நிறப்பூக்கள் மற்றும் மஞ்சள் நிறப்பூக்கள் என்று பல வித வண்ணங்களில் செம்பருத்தி பூக்கள் பூக்கக் கூடியது.

இதில் சிவப்பு செம்பருத்தி ஒன்றே மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த செம்பருத்தி பல மருத்துவகுணங்களை உள்ளடக்கியுள்ளது.

மாதவிலக்கு :

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சினைகளை இந்த செம்பருத்தி நீக்கிவிடும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மூன்று செம்பருத்தியை நன்றாக அம்மியில் அரைத்து பசைபோல் ஆக்கி அதை விழுங்கிவரவேண்டும்.  இதை தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வர வேண்டும்.

இதய நோய்கள் : 

 இதய நோய்கள் உள்ளவர்கள் தினமும் இந்த செம்பருத்தி பூவை பசையாக்கி பாலில் கலந்து சாப்பிடலாம் இதனால்  இதய தசைகள் பலம் பெறும்.  பூக்கள் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் செம்பருத்தி பூப் பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முடி வளர :

பெண்கள் மற்றும் ஆண்கள் தலைக்கு குளிக்கும் போது செம்பருத்தி பூவை நன்றாக வேரில் பட தேய்த்து விட்டு 10 நிமிடம் ஊற வைத்து குளித்துவிட வேண்டும்.

சிறுநீர் எரிச்சல் : 

சிறுநீர் எரிச்சல் குணமாக செம்பருத்தி பூக்களை பறித்து அதை சுடுநீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து பின் கற்கண்டை சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கவும். சிறுநீர் எரிச்சல் சரியாகிவிடும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.