முருங்கை கீரையின் பயன்கள்

dried-mas-and-drumstick-leaves-recipe

தமிழகத்தில் எங்கும் எல்லோரது வீட்டின் கொள்ளைப்புறத்திலும் கிராமங்களில் முருங்கை மரம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள் அதன் காய்கள் மட்டுமல்ல அதன் கீரைகள், பூக்கள் ஏன் பிசின் கூட மருத்துவகுணங்களை உள்ளடக்கியது.

இந்த முருங்கை கீரையில் அதிகமாக இரும்புச் சத்துக்கள் உள்ளது.  வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டால் கூட போதும் உடலுக்கு இயற்கையாகவே வலிமை கிடைத்துவிடும் என்பதில் துளி சந்தேகமும் கிடையாது.

முருங்கை கீரை மிதமான தண்ணீரில் வதக்கி சாப்பிட வேண்டும்.  அதிக தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பின் சமைக்க கூடாது.  இந்த முறையில் அனைத்து சத்துக்களும் தண்ணீரில் கரைந்தப்பின் வெறும் சக்கை மட்டும் தான் மீதம் இருக்கும். அப்படி வடிகட்டிய தண்ணீரை வீணாக்காமல் இரசம் வைத்து விட வேண்டும்.

ஆண்களுக்கு இந்த கீரை ஆண்மைபலத்தையும் வாலிபத்தையும் மீட்டுத்தரக் கூடியது. பெண்களுக்கு இரத்த இழப்பால் ஏற்படும் இரத்த சோகை நோய்களுக்கும் தீர்வு இந்த முருங்கை கீரைதான்.

முருங்கை கீரையை நன்றாக கொதிக்கவைத்து அப்படியே கடைந்து அதில் மிளகுத்தூள் மற்றும் உப்பு தேவைக்கேற்ப கலந்து அந்த சாற்றை தினமும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள மலச்சிக்கல் நீங்கிவிடும்.  பின் உடலுக்கு சக்தியை கொடுத்து பலமாக்கிவிடும்.

முருங்கைக் கீரையின் பயன்கள்

1. விட்டமின் சி சத்து மிக்க இந்த கீரை நமது உடலில் ஏற்படும் சொறி சிரங்கு முதலிய அனைத்து பிரச்சினைகளையும் நீக்கிவிடும்.

2. பித்தத்தால் ஏற்படும் மயக்கம் மற்றும் கண்நோய்கள் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளையும் நீக்கிவிடும்.

3. விட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொண்டால் அவர்கள் கண்கள் ஒளிபெறும்.

4. தொண்டையில் ஏற்படும் கம்மல் மற்றும் வலி போன்றவற்றிற்கும் இந்த கீரையை சமைத்து உணவு உண்ண வேண்டும்.

5. மலச்சிக்கல் ஏற்பட்டு தவிப்பவர்கள் தினமும் இந்த கீரையை மதிய நேரம் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் இது உணவை மிக வேகமாக செரிக்கவைத்து உடனே வெளியேற்றிவிடுகின்றது.

6. சிறுநீர் எரிச்சல் இருந்தால் முருங்கைக் கீரையை நன்றாக கொதிக்கவைத்து மேற்சொன்னவாறு சாறு தயாரித்து குடிக்க உடனே சிறுநீர் பெருக்கு ஏற்பட்டு கற்கள் மற்றும் எரிச்சல் ஆகியவை சரியாகிவிடும்.

இரவில் இந்தக்கீரை மட்டுமல

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.