புதினா கீரையின் பயன்கள்

download

பச்சையமான இலைகளையும் படர்ந்து வளரும் செடிகளாக இந்த கீரைகள் காணப்படும் மருத்துவ குணங்களை பல இந்த இலைகள் கொண்டுள்ளது.  புதினா கீரை காலையில் சமையல் அறையில் சட்னிக்காகவும் துவையலுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.தினமும் இதன் பயன்களை அறியாமலேயே நம் வீட்டார் இதனை பயன்படுத்துகின்றனர்.

புதினா நிறைவான மணத்தையும் மின்ட் சுவையும் கொண்டது.  இதனை வாயில் போட்டு மென்றாலே போதும் வாயில் புத்துணர்ச்சி வந்துவிடும்.  வாயில் உள்ள துர்நாற்றம் மற்றும் கிருமிகள் போய்விடும்.

எல்லா உணவுகள் மீதும் ( காய்கறி குழம்புகள், மட்டன், சிக்கன், நூடுல்ஸ் ) போன்ற எல்லாவித உணவுகள் மீதும் இதனை தூவிவிட்டு வாசனைக்காக சேர்க்கலாம். இது உடனே செரிமானத்தை தூண்டுகின்றது.

இந்த கீரையில் இரும்புச்சத்து, கந்தகச்சந்து, உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.

புதினா இலையில் தயாரித்த சட்னி அல்லது துவையலை உணவுடன் சேர்த்துக் கொண்டால் உணவு செரிமானம் சீக்கிரமாகி உடனே பசியெடுக்கும்.

குமட்டல், வாந்தி ஆகிய உணர்வுகளை புதினா சட்னி கட்டுப்படுத்தும்.  கர்ப்பிணிகள் தினமும் புதினாவை சேர்த்துக்கொள்வது மிக நல்லது.

விக்கல் தொடர்ந்து வந்தால் புதினாவை அப்படியே வாயில் போட்டு நன்றாக மென்றுவிட்டு தண்ணீர் குடித்தால் போதுமானது.

மயக்கம் வருவது போன்று தோன்றினால் கையில் புதினாவை நன்றாக கசக்கி மூக்கில் வைத்து நுகரவேண்டும்.

தீராத தலைவலி இருந்தால் உடனே கீரையை கசக்கி அதன் சாற்றை நன்றாக அரைத்து நெற்றியில் பூசி விடவேண்டும். தலைவலி குணமாகிவிடும்.

தினமும் புதினாவில் சிறிது இஞ்சி மற்றும் உப்புக்கல் வைத்து அரைத்தெடுத்த துவையலை உணவுடன் எடுத்துக்கொண்டுவந்தால் அஜீரணம், வாய்துர்நாற்றம், பித்தம், வாதம், மூட்டுவலி என்று அனைத்துப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.

பெண்களின் மாதவிலக்கும் மற்றும் சிறுநீர் கல் பிரச்சினையும் புதினாவால் நீக்கப்படும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.