கூகுள் குரோமின் Incognito ( இன்காக்னிட்டோ ) வின் பயன்கள்

Screen-Shot-2014-10-07-at-7.05.51-pm

கூகுள் குரோமை தெரியாத நபர்கள் இல்லை என்று கூறலாம்.  தற்போது அனைத்து கணினிகளிலும் இன்டர்நெட் இணைப்புகள் உள்ளது.  பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் மோசில்லா ஃபையர்ஃபாக்ஸ் போன்ற பிரவுஸர்களை விட அதிகமாக கூகுள் குரோமையே பயன்படுத்துகின்றனர்.

இந்த கூகுள் குரோம் பிரவுஸரின் வேகம் மற்றும் அனைத்து Plug-In களையும் சப்போர்ட் செய்யும் தன்மை ஆகியவை அனைத்தும் மற்ற பிரவுஸர்களை விட சிறப்பாக உள்ளது.

இதில் உள்ள இன்காக்னிட்டோ விண்டோ ( Incognito window ) என்பது இதில் சேர்க்கப்பட்ட புதிய வசதி.  இந்த வசதிகள் மிகவும் முக்கியமானது இதன் பயன் என்னவென்றால் High Security ஆக இன்டர்நெட் பிரவுஸிங் செய்வதாகும்.  குரோம் பிரவுஸரின் மூலையில் உள்ள Option மெனுவை கிளிக் செய்யும் போது தோன்றும் New Incognito Window  என்ற வசதியை செலக்ட் செய்யும் போது  புதிய விண்டோ ஒன்று தோன்றும்.private_browsing_Chrome_cro

இந்த விண்டோவில் தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்த ஒரு படம் போல் காணப்படும்  இது Privacy எனப்படும்.இதன்மூலம் நமது பிரவுஸிங் செய்தோமானால் Cookies, Password, History மற்றும் Session ஆகியவை நாம் அந்த Incognito Window வை Close  செய்யும் போது தானாகவே clear ஆகிவிடும்.  ஒவ்வொரு முறையும் நாம் Clear Browsing Data வை கொடுக்கத் தேவையில்லை.

பிரவுஸிங் சென்டரில் இனிமேல் பிரவுஸிங் செய்ய நேரிட்டால் இந்த முறையை பின்பற்றுங்கள்.  உங்கள் மெயில், சமூக வலைதளக் கணக்குகளின் பாஸ்வேர்டு மற்றும் நீங்கள் பார்த்த வெப் பக்கங்களின் History  ஆகியவை வேறு யாருக்கும் தெரியாது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.