கேழ்வரகு எனும் நலம் தரும் வரம்

RAGI

நாம் இப்போது பயன்படுத்தி வரும் ஊட்டச் சத்துபானங்களான காம்ப்ளான், ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்றவைகள் நமது உடலை வலுபெறச் செய்கின்றன. அதற்காக நாம் அதிக பணம் செலவழித்து வாங்குகின்றோம்.  ஆனால் இந்த பானங்களைவிட அதிக சக்திகள் இயற்கை கொடுத்த வரமான கேழ்வரகில் உள்ளன என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

கேழ்வரகு கடுகைவிட சிறிய மணிகளை உடைய தானியமாகும்.  இது சோளத்தை போன்றது ஆனால் சோளத்தை விட சிறியது.  இதன் பயன்கள் அதிகம்.  கேழ்வரகில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

கேழ்வரகில் பனவெல்லம் மற்றும் சுக்கு சிறிது சேர்த்து நன்றாக அரைத்து மாவாக்கி வைத்துக்கொண்டு,  தினமும் ஒரு டம்ளர் பால் அல்லது தண்ணீரை கொதிக்க வைத்து தேவையான அளவு கலந்து கேழ்வரகு மாவை கலக்கி குழந்தைகளுக்கு கொடுத்தால் இது தான் இயற்கையான சத்து பானம்.  இது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு வித்தாகும்.

கேழ்வரகை கூழாக்கியும் குடிக்கலாம் இதுவும் உடலுக்கு சக்தி தரும். பசியைத் தூண்டிவிடும்.  பலத்தை கொடுக்கும் உடல்பலவீனத்தை அகற்றும்.

கேழ்வரகு மாவில் அடை செய்து மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைந்துவிடுவீர்கள்.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுவலியால் அவதிபடுவர்கள் கேழ்வரகு கூழை ஒரு சொம்பு குடித்தால் உடனே மலச்சிக்கல் நீங்கி மலம் இலகிவிடும்.

சர்க்கரை நோயாளிகள் நண்பன் தான் கேழ்வரகு.  இந்த கேழ்வரகில் செய்யப்பட்ட பதார்த்தம் எதுவும் சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்.  கேழ்வரகு சர்க்கரை அளவை இரத்தத்தில் கட்டுப்படுத்துகின்றது.

பெண்களும் இந்த கேழ்வரகை உணவில் சாப்பிட்டு வர மாதவிலக்கு பிரச்சினைகள் இருக்காது.

கொழுப்புச் சத்து இருக்காது இதனால் உடல் மெலதாக வேண்டும் என்பவர்கள் சாப்பிடலாம். சிறுநீரக அறுவைசிகிச்சை கற்கள் உள்ளவர்கள் கேழ்வரகை குறைவாக பயன்படுத்த வேண்டும்.  இதில் உள்ள ஆக்ஸாலிக் ஆசிட் கற்களை சிறுநீரத்தில் உண்டாக்கும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.