வாய்ப்புண் அரைநாளில் ஆறவேண்டுமா இதை முதலில் செய்யுங்கள்

download

புண்கள் எல்லா இடத்திலும் வரும் ஆனால் இந்த வாயில் அல்லது நாக்கில் வந்துவிட்டால் பாவம் அவர்களின் பாடு பெரும்பாடுதான்.  வாய்க்குள் எதையும் காரமாக நுழைக்க முடியாது, ஏன் தண்ணில் சிறிது உப்பு இருந்தால் கூட எரிச்சல் அதிகமாகிவிடும். வாய்ப்புண்கள் இரண்டு வகைகள் ஒன்று உதட்டின் உள் பகுதிகளில் தோன்றும் புண்கள் மற்றொன்று உதட்டின் வெளிப்பகுதிகளில் தோன்றும் புண்கள்.

வாய்ப்புண்கள் வெளி உதட்டின் ஓரத்தில் தோன்றும் புண்கள் எச்சில் புண்கள்.  இந்த புண்கள் எச்சில் தொற்றால் தோன்றுபவை.  லிப்ஸ்டிக்கால் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் பனிவெடுப்புகளால் தோன்றுபவை இதற்கு தேங்காய் எண்ணெய் சிறிது எடுத்து உதட்டில் தேய்த்தால் போதுமானது ஒரு நாளில் பட்டுவிடும்.

நாக்கின் ஓரத்தில் அல்லது உதட்டின் உட்பகுதியில் புண்கள் தோன்றுவது சாதரண விசயமில்லை.  வயிற்றில் ஏற்படும் கோளாறுகளுக்கு  இந்த வாய்ப்புண்கள் அறிகுறிகளாகும்.  அல்சர் பாதிப்பு ஆரம்பித்துவிட்டது என்பதை உணரவைக்க வாய்ப்புண்கள் தோன்றுகின்றன.  ஒரு வாரம்,  மூன்று வேளை உணவுகளில்  ஒரு வேளை சரியாக சாப்பிடாமல் போனால் கூட அல்சர் வந்து விடும்.  அப்போது புண்கள் வாயில் தோன்றி விடுகின்றன.

இந்த வாய்ப்புண்கள் உடலில் சூடு அதிகமானால் கூட தோன்றிவிடும். மூச்சடக்கி செய்யும் மூச்சுப் பயிற்சிகள் வெயிலில் பழக்கமில்லாமல் திடீரென்று அலைவது போன்றவைகள் வாய்ப்புண்கள் ஏற்படக் காரணமாக உள்ளது.  அஜீரணம், வயிற்றில் அமிலம் அதிகமாக உள்ளது போன்ற காரணங்களால் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன. வாயில் துர்நாற்றம் வீசுவதும் வயிற்று கோளாறுகளின் அறிகுறிகள் தான்.

சரி இந்த வாய்ப்புண்களை நீக்குவதற்கான சிறந்த வழி உள்ளது.  காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றுடன் வெது வெதுப்பான தண்ணீரில் வாயைக் கொப்பளித்து விடவும்.  பின் ஒரு முழுதேங்காயின் துருவலை வாயில் போட்டு நன்றாக பால் வர மெல்லவும் அந்த பாலை அப்படியே உதட்டில் புண்ணுள்ள இடத்தில் படுமாறு சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் பாலை மட்டும் விழுங்கி விடவும்.

சக்கையை புண்ணில் படுமாறு உதட்டால் அழுத்தி வைத்திருக்கவும். ஒரு 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் வைத்திருந்து விழுங்காமல் அதை குப்பைத் தொட்டியில் துப்பிவிடவும்.  உடனே புண்ணின் எரிச்சல் குறைந்து விடும். காரம் மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை இரு நாட்கள் தள்ளி வைத்துவிட்டு தயிர் மற்றும் அமிலம் இல்லாத பழ உணவுகள் ( ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா, சப்போட்டா ) எடுத்துக்கொள்ளவும்.  மறக்காமல் மூன்று வேளையும் உணவு உட்கொள்ளவேண்டும்.

அல்சர் மற்றும் வாய்ப்புண்களை இந்த தேங்காய்ப்பால் குணமாக்கிவிடும்.  ஒரே நாளில் வாய்ப்புண் ஆறிவிடும்.  ஆனால் வயிற்றுப்புண் ஆற வேண்டுமெனில் ஒரு வாரம் தொடர்ந்து மேற்சொன்னவற்றை செய்யவேண்டும்.  பட்டினியைத் தவிர்த்து கட்டாயம் மூன்று வேளையும் சிறிது உணவையாவது உட்கொண்டால் அல்சர் ( வயிற்றுப்புண் ) நோயில் இருந்து தப்பிக்கலாம்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.