தமிழகத்தில் விஏஓ தேர்வு தேதி மாற்றம்

tnpsc_400x400

தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையால் அதிகமாக சென்னை, கடலூர் மாவட்டங்கள் சேதமடைந்ததை அடுத்து தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்தும் விஏஓ தேர்வை ஒத்தி வைத்துள்ளது.  ஏற்கனவே பதிவு செய்யும் நாளை டிசம்பர் 14 லிருந்து டிசம்பர் 31 வரை நீட்டியுள்ளது.  இப்போது தேர்வு நாளை பிப்ரவரி 14 அன்றிலிருந்து பிப்ரவரி 28 க்கு மாற்றியுள்ளது.

இந்த காலநீட்டிப்பை பயன்படுத்தி மழையால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ளலாம் என்பதற்காக TNPSC கால அவகாசம் கொடுத்துள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.