கொய்யா இலையில் உள்ளது டெங்கு காய்ச்சல் மருந்து

download

டெங்கு காய்ச்சல் மழைக்காலங்களில் பரவிவிடும் தற்போது தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பெய்த மழையால் நன்னீர்க் குட்டைகள் அதிகமாக உருவெடுத்துள்ளன. இந்த நன்னீர் குட்டைகளில் தான் டெங்கு கொசு தனது முட்டைகளையிட்டு குஞ்சு பொரிக்கும்.

இதனால் கொசுக்கள் நிறைய பரவி டெங்கு காய்ச்சலை உற்பத்தி செய்து வருகின்றது.  இந்த டெங்கு காய்ச்சல் வந்தால் முன்று வாரங்கள் அல்லது ஒரு மாதத்தில் நம்மை பாடாய் படுத்திவிடும்.  காய்ச்சல் வருவதற்கு முன்பே உடம்பு பலமாக வலி எடுக்கும்.  இந்த வலி கை, கால்களில் பரவிவிடும்.  பின் தலையில் பாரமாக இருக்கும் கூடவே சளி, இருமல் போன்றவைகளும் இருக்கும்.

இந்த அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது உடல் நடுங்கினாலோ கண்டிப்பாக டெங்கு காய்ச்சல் அறிகுறிதான் இதற்கு நிலவேம்பு கசாயம் குடிக்கலாம்.  ஆனால் நிலவேம்பு கசப்பாக உள்ளது என்று தள்ளிவைத்து விடுகின்றனர்.  குழந்தைகளுக்கு கொடுப்பது கஷ்டமாக உள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.  இது கசப்பான மருந்து என்பதால் இதற்கு பதிலாக கொய்யா இலையும் டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுகின்றது.

கொய்யா இலையில் டெங்கு காய்ச்சலுக்கான மருந்து உள்ளது.  இந்த கொய்யா இலையை சற்று குருத்தாக எடுத்து நன்றாக அம்மியில் இட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் போட்டு வடிகட்டி இறக்கவும்.  இந்த தண்ணீரை பனங்கற்கண்டு கொண்டு  கொஞ்சம் சேர்த்து  குடிக்கவும்.  காய்ச்சல் குணமாகும் வரை தினமும் குடிக்கவும். வரும் முன் காக்கவும் இந்த கொய்யா தேனீர் பயன்படுகின்றது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.