8 வயது சிறுவர் ஐதராபாத் போலிஸ் கமிஷனர் ஆனார்

271

ஒவ்வொருவருக்கும் சிறு வயதில் ஒவ்வொரு கனவு இருக்கும் கனவுகள் எப்போதுமே பெரியதாக இருக்கும். சிலர் மருத்துவர், சிலர் எஞ்ஜினியர், சிலர் கம்ப்யூட்டர் எஞ்ஜினியர் என்று ஆசைகள் பெரியதாக இருக்கும்.  ஐதராபாத்தைச் சேர்ந்த 8 வயதே ஆன ரூப் அவுரோனா என்ற சிறுவரின் கனவு போலிஸ் கமிஷனர் ஆகவேண்டும் என்பதாகும்.

405236-ani-twitter-hyderabad-boy-one-day-commissioner

இவரது ஆசை நேற்று நிறைவேறியிருந்தது. இவரது ஆசையை ஐதராபாத் கமிஷனருக்கு ஒரு கடிதத்தில் முன்பு அனுப்பியிருந்தார்.  கமிஷனர் மேலும் இந்த கடிதத்தை சாதரணமாக விடாமல் விசாரித்ததில் அவர் தலாசீமியா என்ற ஒரு கொடிய நோய் ( இரத்த இழப்பு நோய் ) பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு 25 நாட்களுக்கு ஒரு முறை இரத்தம் ஏற்றப்பட வேண்டும் என்றும் தெரிய வந்துள்ளது.

பரிவு உள்ளம் கொண்ட ஐதராபாத் கமிஷனர் சிறுவரை அழைத்து அவருக்கு கமிஷனராக பதவி கொடுத்து நேற்று (15-12-2015) ( ஒரு நாள் முழுக்க ) கமிஷனராக சிறுவர் பணிபுரிய அவருக்கு உதவியிருக்கின்றார்.

இந்த சிறுவனின் பெற்றோர் ரஞ்சிதா – விக்ரம் இருவரும் பள்ளி ஆசிரியர்கள் இருவரும் தன் பிள்ளையை போலிஸ் கமிஷனராக்க வேண்டும் என்று கூறியே வளர்த்துள்ளனர்.  இரண்டாவது படித்து வரும் சிறுவர்  தனது கனவு நிறைவேறிவிட்டது என்ற சந்தோஷமே அவரை நெடுநாட்கள் வாழவைத்துவிடும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.