ஆண்களும் அழகுதான்

4728199003_579caf9508_b

அழகுக்கு இலக்கணமாக பெண்களையே எப்போதும் சொல்கின்றோம்.  ஆண்கள் தனது அழகில் அவ்வளவாக கவனம் செலுத்துவது இல்லை.   கடின உழைப்பு, குடும்பம், சம்பாத்தியம், வீட்டு கவனம் என்று தனது வாழ்நாள் முழுவதும் ஆண்கள் தன்னை நம்பியவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதிலேயே கவனமாக உள்ளதால் ஆண்கள் அழகைப்பற்றி கவலை படுவதில்லை.  திருமணமாகிவிட்டது இனிமேல் என்ன என்று அடுத்த வேலையை கவனிக்க சென்று விடுவார்கள்.

ஆனால் ஆண்கள் உடலை அழகாகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மிக முக்கியம்.  ஏனென்றால் பெண்களைவிட ஆண்கள் தான் வெளி உலகத்தில் அதிகம் இருக்கின்றனர்.  இதனால்  சரும பிரச்சினைகள் ஏற்படுகின்றது. தேமல், முடி கொட்டுதல், முகப்பரு, கருவல் அடைதல் போன்றவை ஆண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்.

ஆண்கள் முதலில் தனது உடலை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் தினமும் எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, யோகாசனம் மற்றும் ஸ்கிப்பிங் போன்றவைகள் தினமும் செய்ய வேண்டும்.

சருமத்தில் தேமல் மற்றும் கொப்புளங்கள் வெயில் மற்றும் சோப்புகளால் வருகின்றது.  வாசனைக்காக கெமிக்கல் சோப்புகளை பயன்படுத்தாமல் மூலிகை சோப்புக்களை பயன்படுத்தினால் நன்று.11263593_990557757623724_397053025_n

கருமையாக இருக்கும் ஆண்கள் தினமும் குளிக்கும் போது சோப்பு போட்டு விட்டு தயிரை உடல் முழுக்க தேய்த்து விட்டு குளித்தால் கருமை மறையும்.

பொன்னிறமாக மாற தினமும் இரண்டு ஸ்பூன் ஆவாரம் பூ பொடியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின் அதை வடித்து சிறிது சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும்.

முடிப்பிரச்சினைகளுக்கு வாரம் ஒரு முறையாவது தலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.  இரும்புச் சத்து அதிகம் வேண்டும்.  உலர்திராட்சை, பேரிச்சை, தேன் போன்ற பழங்கள் மற்றும் முருங்கைக் கீரையை அதிகமாக உண்ணவேண்டும்.

வாயை ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை வெறும் கைகளால் தண்ணீர் விட்டு விலக்கி நன்றாக கொப்பளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆண்கள் வெயிலில் அலைவதால் வியர்வை வாடை அதிகமாக இருக்கும் பெண்களைப் போல் தலையில் பூ வைத்துக் கொள்ள முடியாது அதனால் தினமும் நன்றாக குளித்து விட்டு அதிக கெமிக்கல் இல்லாத சென்ட் அல்லது ஜவ்வாதை அக்குள் மற்றும் சட்டையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவுகளான, மாடு, ஆடு மற்றும் முட்டைகளை உண்ணுவதை குறைத்துக் கொண்டால் வியர்வையில் ஏற்படும் வாடைகள் குறையும்.images

எவ்வளவு தான் ஒருவர் அழகான தோற்றம் உள்ளவராக இருந்தாலும் தீய பழக்கங்கள் இருந்தால் எந்தப் பயனும் இருக்காது.  பாக்கு போடுதல், புகைபிடித்தல், மது, மாது, சுயஇன்பங்கள், ஓரினச் சேர்க்கை போன்றவைகள் இன்றைய காலத்து ஆண்களை பிடித்து ஆட்டும் தீய பழக்கங்கள் இவற்றை பழகியிருந்தால் விலகிவிடுவது நல்லது இல்லையெனில் உடலும் பாதிக்கப்படும் மற்றவர்கள் உங்கள் மீதுள்ள அன்பும் நீங்கிவிடும்.  நமக்காக ஒருவர் ஒருவருக்குதான் நாம் என்ற எண்ணத்துடன் வாழும் ஆண்மைதான் அழகு.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.