கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத பொருட்கள்

06-pragnancy-300

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு சில சமயம் கருத்தரிப்பு ஏற்பட்டு ஒரு சில நாட்கள் கூட தங்காமல் கர்ப்பம் கலைந்து விடுகின்றது.  இதன் காரணம் அறியாமலே இருப்பதால் மீண்டும் மீண்டும் கருக்கலைந்து விடுகின்றது. இவர்கள் உணவுமுறையும் ஒரு காரணம் தான்.

கர்ப்பமாக வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் முதலில் பப்பாளி பழத்தை ஓரங்கட்ட வேண்டும்.  இந்த பப்பாளி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிடுவது இது கர்ப்பப்பையில் உள்ள கழிவுகள் அனைத்தையும் சுத்தப்படுத்தி சிறிது வலியுடன் வெளியே தள்ளிவிடும்.  ஆனால் கர்ப்ப காலத்தில் இதை தொடவே கூடாது. சிசு உருவானால் கூட அதையும் வெளியேற்றிவிடும்.

அதே போல் எள்ளுருண்டைகள் மற்றும் எள்ளுப்பூ ஆகியவை பாட்டி காலத்து கர்ப்ப கலைப்பு மருந்துகள்.  இவைகளை கர்ப்ப காலத்தில் தொட விடக்கூடாது.

அன்னாசிப் பழம் அல்லது செங்காய் பதத்தில் இருக்கும் அன்னாசி சக்திவாய்ந்தது இது மாதவிடாய் பெருக்கியாகும்.  கர்ப்பத்தை சுத்தப்படுத்திவிடும் இரத்தப்போக்கையும் வயிற்று வலியாகிவிடும்.

கர்ப்பம் தரித்த ஆரம்பத்தில் இலவங்கப்பட்டையை குழம்பில் பயன்படுத்தாதீர்கள். இது கருப்பையில் உள்ள கட்டி மற்றும் அழுக்கை வெளியேற்ற சித்த மருத்துவத்தில் சாப்பிட சொல்வார்கள்.

வாழைப்பழத்தை மலச்சிக்கல் நீங்க சாப்பிடுவோம் ஆனால் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் இவைகள் வேண்டாம்.

கர்ப்பம் தரித்தது தெரிந்து விட்டால் உடனே ஒரே மருத்துவரை அணுகி அவர்களிடம் தொடர்ந்து சென்று ஆலோசனை கேட்ட பின்னரே மருந்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.