மனிதனை சாப்பிடும் பிளாஸ்டிக் அரிசி

401712_620

அரிசி என்பது மனிதன் சாப்பிடத்தான் வாங்குவது.  ஆனால் இப்போது அரிசிகள் நம்மை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றன.  ஆமாம் விலையும் அதிகம் அரிசியில் கலப்படமும் நடக்கின்றது. அதனால் என்ன அது தான் காலம் காலமாய் உள்ளதே என்று சாதரணமாக போனால் இந்த கலப்படம் வேறு.  ரேசன் அரிசியையோ அல்லது கல் குருணை போன்ற அரிசியையோ பாலிஸ் செய்து அரிசியோடு கலப்படம் செய்வதையெல்லாம் தாண்டிவிட்டது.

இந்த கலப்படம் அரிசியைப் போலவே போலி பொம்மை அரிசியை உருவாக்கி அதில் கலப்படம் செய்து அதை நல்ல அரிசியுடன் கலந்து விடுகின்றார்கள்.  இது தான் தற்போதைய கலப்பட முறை.  இந்த பிளாஸ்டிக் அரிசியை தயாரிப்பது யாரென்றால் எந்த ஒரு ஒரிஜினலுக்கும் சரியான போலி தயாரிக்கும் சீனா தான்.

Steve Hurst - USDA-NRCS PLANTS Database - Not copyrighted image

உண்மையான நெல்லில் இருந்து எடுக்கப்படும் அரிசியின் தோற்றம்.

இந்த பிளாஸ்டிக் அரிசி பிளாஸ்டிக்கால் ஆனது கிடையாது இது சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் சில ரெசின்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.  சில சமயம் உருளைக் கிழங்கின் மாவில் கூட செய்கின்றார்களாம்.

இது பள பள வென்று இருந்தாலும் இது உணவுக்கு ஏற்றதல்ல.  சாப்பிட்டவுடன் நமது இரைப்பை சுரக்கும் HCL அமிலத்துடன் வினைபுரிந்து அங்கே ஒரு வேதிவினையை நடத்திவிட்டு குடலுக்கு சென்று குடலை புண்ணாக்கி விட்டுவிடும்.

நாம் சாப்பாடு பளபள வென்று வெண்மையாக இருக்க வேண்டும் என்று சுண்ணாம்பு போடுவார்களே அதைவிட கொடுமையானது இந்த முறை.  நம் தமிழ்நாட்டில் இது இன்னும் புழக்கத்தில் வரவில்லை நம் கலப்படக்காரர்கள் இன்னும் இந்த மேல் நாட்டு கல்வியறிவு (?) பெறவில்லை.  ஆனாலும் நாம் சோதனை செய்தப்பின் தான் வாங்கவேண்டும்.

அரிசி சாப்பிடும் நாடுகள் ஆசிய நாடுகள் மட்டும் தான்.  இந்தோனேசியா, இலங்கை, சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா தான்.  இவர்களை நன்றாக குறிவைத்துவிட்டார்கள்.

எப்போதும் வாங்கும் கடைக்காரரிடம் இந்த விஷயத்தை தெரியப்படுத்தவும். அவரும் உஷாராகி விடுவார்.  ஒரு ரூபாய் கொடுத்து ரேஷன் அரிசி சாப்பிட மனமில்லாமல் 2500 ரூபாய் கொடுத்து உங்கள் வீட்டுக்கு கேடை உருவாக்கி விடாதீர்கள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.