வெஸ்டர்ன் டாய்லட்டால் ” அது ” வருமா…?

indian-vs-western-toilet

முன்பெல்லாம் மலம் கழிப்பது என்றால் காலையில் எழுந்து பல் துலக்கி காபி அல்லது தேநீர் குடித்தவுடன் வெளியே சென்று வயிற்றில் நேற்றைய கழிவுகளை அகற்ற ஏரிக்கரை அல்லது காட்டுப்பகுதிகளை நோக்கி நடந்து சென்று குத்தவைத்து உட்கார்ந்து கழித்துவிட்டு வருவார்கள்.

anal-rectal-angle-sitting-squatting-comparison

மலக்குடல் மலம் கழிக்கும் போது வெஸ்டர்ன் டாய்லட்டில் உட்காரும் போதும், சாதரணமாக குத்த வைத்து ஊட்கார்ந்த போதும் உள்ள நிலை.

இப்போது நகரத்தில் வீட்டில் டாய்லட் கட்டி தினமும் சென்று மலம் கழித்து விட்டு வருகின்றார்கள்.  இதுவும் தவறல்ல.  ஆனால் வெஸ்டர்ன் டாய்லட் என்ற புது டாய்லட் முறை கடந்த 20 வருடங்களாக இருந்து வருகின்றது. இதில் சவுகரியமாக உட்கார்ந்து கொண்டு பேப்பர் படித்துக் கொண்டோ அல்லது  டீ ( கண்றாவி) குடித்துக் கொண்டோ மலம் கழித்துவிட்டு பட்டனை அமிழ்த்தினால் போதும் கிளீன் ஆகிவிடும். பின் நாம் பேப்பரை எடுத்து……….  இது தான் வெஸ்டர்ன் டாய்லட்.

இதில் நன்மை என்னவென்றால் வயதானவர்கள், கர்ப்பிணிகள்  மற்றும் நோயாளிகள் மலம் கழிக்க சிரமப்படுவர்.  அவர்கள் உட்கார்ந்து போக எளிதாக இருக்கும்.  ஆனால் மற்றவர்களுக்கு கீழ்க்கண்ட பாதிப்புகளை தரும்.

1. மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

2. மலம் முழுதும் வெளியேற்றப்படாததால் வயிற்றில் தங்கிவிடும் புழுக்கள் உற்பத்தியாகிவிடும்.

3. முலநோய்களை உண்டாக்கும்.

4. குடல் தோற்றம் மாறிவிடும். ( குடலேற்றம் அடைந்து விடும் ).

5. வாயுக் கோளாறுகள் வந்து விடும்.

6. சரியாக சுத்தம் செய்யப்படாததால் தொற்று நோய்கள் பரவிவிடும்.

7. ஆசனவாயில் நமச்சல், எரிச்சல் ஏற்படும்.

8. ஆசனவாயில் புழுக்கள் மற்றும் புண்கள் ஏற்படும்.

9. மலக்குடல் பாதிக்கும்.

10. ஒன்றரை வாளி தண்ணீர் கழுவி விட வேண்டும்.

நாம் குத்தவைத்து உட்கார்ந்து மலங்கழிக்கும் போது நம் தொடைகள் வயிற்றை அமிழ்த்தும் அப்போது வயிற்றில் அழுத்தம் ஏற்பட்டு குடல் வழியாக மலம் வெளிவந்து விடும்.  வாயுக்கள் குடலை விட்டு பிரிந்து சென்று விடும். முழுமையாக கழிந்து விட்ட நிம்மதி இருக்கும்.  ஆனால் வெஸ்டர்ன் டாய்லட்டில் இது சாத்தியமானதல்ல.

இனிமேல் வீடு கட்டும் போது வெஸ்டர்ன் டாய்லட்டை கண்டிப்பாக வையுங்கள். ஆனால் பக்கத்தில் பழைய டாய்லட்டையும் வையுங்கள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.