பற்களில் உள்ள டீ மற்றும் காபி கறையை போக்குவது எப்படி?

images

உலகில் அதிகமாக அனைவராலும் அருந்தக் கூடிய பானம் இரண்டு தான் ஒன்று காபி மற்றொன்று தேநீர் ( டீ ) இந்த இரண்டும் அதிகமாக மக்களால் தினமும் அருந்தக்கூடியது.

download

இந்த இரண்டு உற்சாக பானத்திலும் நன்மைகள் மற்றும் தீமைகள் பாதிக்கு பாதி இருக்கின்றது.  அதைப்பற்றி விவாதிக்க வேறு கட்டுரைகள் உள்ளது.   இப்போது இந்த பானங்களால் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்குவது பற்றி பார்ப்போம்.

பற்களில் தினமும் டீ மற்றும் காபி அருந்துவதால் உண்டாகும் மஞ்சள் கறைகள் நாள்தோறும் படிந்து படிந்து நீங்கா கறையாக மாறிவிடுகின்றது.  அழகான முகத்தோற்றத்தை உடையவர்களுக்கு கூட மஞ்சள் பற்கள் திருஷ்டியாக மாறிவிடுகின்றது.

இதைப் போக்க கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றுங்கள்

1. பல்துலக்குமுன்பே தினமும் வாயைக் நன்றாக கொப்பளித்துவிட்டு தேநீர் பருகுங்கள்.

2. பல் துலக்கிவிட்டு பின்னர் தேநீர் மற்றும் காபியை அருந்த வேண்டாம்.

3. மஞ்சள் கறை படிந்தவர்கள் எலுமிச்சை சாற்றை பிரஷ்ஷில் தொட்டு விட்டு பின்னர் உப்பை தொட்டு பற்களை மென்மையாக தேய்த்து வர மஞ்சள் பற்கள் மாறிவிடும்.images

4. சுண்ணாம்பு, பேக்கிங் சோடா, துணிப் பவுடர் போன்றவைகளை எக்காரணம் கொண்டும் பற்களில் பயன்படுத்திவிடாதீர்கள் வயிற்றுக்குள் சென்றாலே ஆபத்து மற்றும் ஈறுகள் புண்ணாகிவிடும்.

5. தேநீர் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டாம் லைட்டாகவே சாப்பிடுங்கள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.