அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுப்போக்கு குணமாக

d01

மழைக் காலம் ஆதலால் எங்கும்  தொற்று நோய்க்கிருமிகள் தான்.  எல்லா இடங்களிலும் நோய்த்தாக்குதல் அதிகரிக்கும்.  அந்த வகையில் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுவலி வருவது தொற்றாகும்.  சீரணமாக உணவுகள் இரைப்பையில் வெகு நாட்கள் தங்கிருந்து தான் இந்தப் பிரச்சினைகள் வருகின்றன.

தினமும் சாப்பிடும் உணவுகள் சாப்பிட்டப்பின் உணவு செரிமானம் ஆக சற்று நேரம் தரவேண்டும்.  அதற்குள் உறங்கச் சென்றோமானால் உணவு செரிமானம் ஆகாமல் இறைப்பையில் தங்கிவிடும்.  பின் செரிமானம் ஆகாமலே அடுத்த நாள் உணவும் உள்ளே செல்கையில் அது நஞ்சுணவு ( Food Poison )  ஆகின்றது இது தவறானது. இவ்வாறு கெட்டுப்போன உணவு வயிற்றில் இருந்தால் நாம் ஏப்பம் விடுகையில் அழுகிய முட்டை வாடை மற்றும் அந்த சுவை நமது நாக்கில் தெரியும்.

இவ்வாறு அறிகுறி அறிந்துவிட்டால் உடனே வீட்டில் உள்ள சீரகத்தை ஒரு ஸ்பூன் எடுத்து நன்றாக அம்மியில் வைத்து அரைத்துப் பொடியாக்கி விட்டு வெந்நீரை வைத்து அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.  டீ பருகுவது போல ஒரு சொம்பு சீரகத்தண்ணீரையும் சூட்டோடு விழுங்க வேண்டும்.  சற்று உரைப்பாக இருந்தாலும் உடனே இரைப்பையில் உள்ள உணவுகளை செரித்தாலும் செரிக்காவிட்டாலும் சிறு குடலுக்கு அனுப்பி விடும் அங்கிருந்து மலக்குடல் வழியாக சிறிது வயிற்றுப் போக்குடன் வெளியேற்றிவிடும்.

இந்த அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுப்போக்கு இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் வரை நீடிக்கும்.  சீரகம் தண்ணீர் குடித்த அந்த நாள் முழுவதும் எலுமிச்சை சாற்றை சர்க்கரை மற்றும் உப்பு ( அல்லது கடைகளில் கிடைக்கும் எலக்ட்ரால் பவுடரையும் ) கலந்து சர்பத் தயார் செய்து அருந்தலாம்.  ஏனென்றால் நாள் முழுக்க வாந்தி அல்லது பேதி ஏற்பட்டு உடல் களைத்துப் போயிருக்கும்.  இதற்க சர்பத் நல்ல சக்தி மற்றும் பலத்தை தரும்.

இரைப்பை கிளீன் ஆக ஆக பசியெடுக்க ஆரம்பிக்கும் உடனே பழையபடி சாப்பாட்டில் இறங்காமல் பழங்கள் அல்லது பழரசங்களை கோதுமை ரொட்டி அல்லது மென்மையான இட்லியுடன் மீண்டும் உணவை ஆரம்பியுங்கள்.  இப்போது ஏப்பத்துடன் முட்டை வாடை வராது.

அஜீரணத்தை சாதரணமாக நினைக்க வேண்டாம்.  இதனால் இரைப்பை வலுவிழந்து விடும்.  அஜீரணத்தை தவிர்க்க வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகள் ( பீட்சா, பரோட்டா, மைதா பிரட், இனிப்புகள் ) அனைத்தும் செரிமானம் ஆக ஒரு நாள் ஆகும்.  அதனால் அவற்றைச் சாப்பிட்டு விட்டு உடனே உறங்க வேண்டாம்.

2. நேரடியாக கோதுமை மாவால் செய்யப்பட்ட சப்பாத்தி, ரொட்டி, ஆகியவைகளை உண்ணலாம்.

3. அஜீரணத்திற்கு அமிலம் சுரப்பி குறைவாக செயல்படுவது தான் காரணம்.  இதனால் சாப்பிட்டபின் உறங்காமல் சிறிது நேரம் ( அரை மணி நேரம் ) உலாவுதல் அல்லது வேலை செய்தல் ஆகியவைகள் இருக்க வேண்டும்.

4. சாப்பிட்ட பின் திரிபலா சூரணம் பொடியை சாப்பிடலாம்.  மேலும் சீரகம் சிறிது சாப்பாட்டுக்கு பின்னர் சாப்பிட்டு வந்தால் உடனே சீரணம் ஆகிவிடும்.  சீரகத்துடன் ஒரு பூண்டுப் பல் உண்டு வந்தால் வாயுத்தொல்லை முற்றிலும் குணமாகிவிடும்.

5. சாப்பாட்டுடன் கண்டிப்பாக சீரக ரசம் கடைசியாக உண்டால் நமக்கு சீரணப்பிரச்சினைகள் வாரா.

6. மேலும் அஜீரணத்தால் உண்டான வயிற்றுப்போக்கு நிற்க ஒரு பிரட் பாக்கெட்டை முழுவதும் பாலில் நனைக்காமல் சாப்படவும்.  பின் கசாகசா வை சாப்பிட வேண்டும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.