கொய்யா சர்க்கரை நோய்க்கு எதிரியா?

G2

கொய்யா நமது தமிழ்நாட்டில் விளையக்கூடிய ஏழைகளின் ஆப்பிள்.  ஒரு கொய்யாபழமானது இரண்டு ஆப்பிள்களின் சக்தியைக் கொண்டுள்ளது.  பெரும்பாலும் இப்போது நாட்டுக் கொய்யாக்கள் கிடைப்பதில்லை  நாட்டு கொய்யா சொரக்காய் வடிவத்தில் விதை சற்று அதிகமாக இருக்கும்.  ஒரு பழுத்த கொய்யாவை விட அதன் செங்காய் தான் இனிமையாக இருக்கும்.

கொய்யா மலிவான விலையும் கூட ஒரு ஆப்பிள் வாங்கும் செலவில் அரைக்கிலோ கொய்யாவை வாங்கி விடலாம்.  கொய்யாவில் அதிகமாக மினரல் மற்றும் விட்டமின்கள் உள்ளன ( கால்சியம் அதிகமாக உள்ளது ) இதனால் எலும்புக்கு பலத்தை கொடுக்க கூடியது. இரும்புச் சத்து உடலுக்கு பலத்தை கொடுக்க கூடியது.

கொய்யாப்பழம் சர்க்கரை ( நீரிழிவு ) நோய்க்காரர்களுக்கு அரு மருந்து தான்.  இது இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகின்றது.  இது குளிர்ச்சியான பழம் என்பதால் வயதானவர்கள் மற்றும் சளிப்பிடித்தவர்கள் இரவில் மற்றும் குளிர் காலங்களில் தொடவேண்டாம். வயிற்று வலியும் ஏற்படும்.  வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றை அடைத்துக் கொள்ளும்.  மலச்சிக்கலை நீக்கும்.

கொய்யா  இலைக் கொழுந்தை சாப்பிட்டு வந்தால் பல் ஈறுகளில் உள்ள தொற்று சரியாகும்.  வாய் துர்நாற்றம் நீங்க பழத்தை சாப்பிடலாம் விட்டமின் ஏ குறைவால் தோன்றும் கண் குறைபாடுகளுக்கு நீங்கள் கொய்யாவை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்.

கொய்யா ஒரு குறை தீர் பழம். இதை உட்கொண்டு வந்தால் மதுக்கு அடிமையாகி உள்ளவர்களை மாற்றி விடும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.