சர்க்கரைவள்ளி கிழங்கு சர்க்கரை நோயாளியின் கற்ப கிழங்கு

download

சர்க்கரையைப் போல இனிமையான ருசியையும் குணத்தையும் கொண்டுள்ளது. ஏனெனில் இதை சர்க்கரை நோயாளிகள் கூட பயப்படாமல் சாப்பிடலாம். கிழங்குவகையில் இயற்கையிலேயே இனிப்புச் சுவை கொண்ட கிழங்கு சர்க்கரை வள்ளி கிழங்கு.  இந்த கிழங்கு வகைகள் வண்டல் மண் நிறைந்த பகுதிகளில் வளருவதால் அதற்கேற்ப செழுமையும் போஷாக்கும் கொண்டுள்ளது.

இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு மிகுந்த சக்தியை உடலுக்கு கொடுக்கின்றது ஒரு நூறு கிராம் சர்க்கரை வள்ளிக் கிழங்கில் கீழ்க்கண்ட சத்துக்கள் உள்ளன

ஆற்றல் = 86 கிலோ கலோரி
கொழுப்பு = 0
கொலஸ்ட்ரால் = 0
சோடியம் = 55 மி.கி.
பொட்டாசியம் = 337 மி.கி.
நார்ச் சத்து = 3 கிராம்
சர்க்கரை = 4.2 கிராம்
புரதம் = 1.6 கிராம்

இந்த வகை  கிழங்குகளில் மாவுச் சத்து நிறைந்து காணப்படுகின்றதால் இதில் பிளாவனாயிட்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட், தாது சத்து, நார்ச் சத்து நிறைந்தது. வெப்பமான பகுதிகளில் விளையக்கூடிய இது, தாது சத்து, நார்ச் சத்து நிறைந்தது.   இது சர்க்கரை வள்ளிக் கிழங்காக இருந்தாலும் இதன் சர்க்கரை உயர்த்தும் அளவு மிக குறைவு.  அதனால் சர்க்கரை ( நீரிழிவு ) நோள் உள்ளவர்கள் பயப்படாமல் சாப்பிடலாம்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள சத்துக்கள் நுரையீரல் புற்று நோயை துரத்தியடிக்கின்றது. தொண்டை புற்று நோயையும் குணமாக்குகின்றது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளன. இவை புரதம் நிறைந்த கிழங்கு ஆகும்.

பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்று நோயை குணமாக்கும்.  சர்க்கரை வள்ளிக் கிழங்கினை பச்சையாக சாப்பிட வேண்டாம் அதில் வரும் பால் மயக்கத்தை உண்டாக்கும்.  அதை நன்றாக வேகவைத்து தோலுடன் சாப்பிடுவது நல்லது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள ஆக்ஸாலிக் ஆசிட் ஆனது நமது உடலில் சென்றவுடன் சிறுநீரகத்தில் ஆக்ஸலேட் உப்புகளாக மாறிவிடுகின்றது.  இதனால் சிறுநீரக கற்கள் மற்றும் எரிச்சல் ஏற்படும். அதிக தண்ணீரை குடிக்க வேண்டும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.