சர்க்கரை நோயாளிகள் பயப்படாமல் மாம்பழம் சாப்பிடுங்கள்

mango (1)

பருவகாலம் வந்தாயிற்று மாம்பழமும் விற்பனை தொடங்கியாற்று தெருவெல்லாம் கூறு போட்டு வைத்து விற்கின்றார்கள்.  எல்லோரும் வாங்கி அழகாய் ருசித்து சாப்பிடுகின்றார்கள் ஆனால் சர்க்கரை நோயாளிகள் ( நீரிழிவு நோய் ) உள்ளவர்கள் பாவமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் நாவில் எச்சிலுடன் சாப்பிடலாமா வேண்டாமா என்று.

கவலையே வேண்டாம் ஆய்வின் முடிவே கூறியுள்ளது சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று.  மாம்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் சர்க்கரை நோயினை உண்டாக்கும் இன்சுலின் சுரப்பி மற்றும் அதன் கெட்ட கொழுப்பினை எதிர்க்கும் மருந்துகளைப் போல் செயல்படுகின்றது.

மாம்பழம் சாப்பிடுவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது.  முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் அதன் முக்கியத்துவம் அறிந்து தான் அதை முக்கனிகளில் ஒன்றாக வைத்து இருக்கின்றார்கள்.  ஆனால் வெப்பப் பழம் அதனால் சூடு கொஞ்சம் அதிகரிக்கும் இதனால் தயிர் அல்லது குளிர்ந்த மோரை மாம்பழம் சாப்பிட்ட பிறகு குடித்தல் நலம்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் மாம்பழம் சாப்பிட கூடாது மேலும் சாப்பிட்டால் சூட்டை கிளப்பி உதிரப்போக்கை அதிகரித்துவிடும்.  ஆனால் மற்ற நாட்களிலும் மெனோபாஸ் அடைந்த பெண்கள் ருசித்து சாப்பிடலாம்.  கால்சியம் சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தை கருவுற்ற பெண்கள் தொடர்ந்து கிடைக்கும் போதெல்லாம் சாப்பிட்டால் குழந்தை புஸ்டியாகவும் அழகாகவும் பலமடைந்ததாகவும் பிறக்கும் என்பதில் சிறு சந்தேகமும் வேண்டாம்.

பல்வலி வந்தால் மாம்பழத்தை துண்டாக்கி கடைவாயில் வைத்துக் கொண்டால் அல்லது எந்த ஈறு வலிக்கின்றதோ அதன் மேல் பழம் படுமாறு வைத்து விட்டால் போதும் பல் வலி சரியாகிவிடும்.

ஆனால் மாம்பழத்தை இயற்கையாக பழுத்தப்பின்னரே சாப்பிட வேண்டும்.  சுண்ணாம்புக்கல் மற்றும் அறையில் வெப்பப்படுத்தி பழுக்க வைத்ததை உண்டால் மேற் சொன்ன நன்மைகள் எல்லாம் எதிர்ப்பதத்தில் நிகழ்ந்துவிடும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.