சிறுநீர் பாதை எரிச்சல் (அ) சிறுநீர்ப்பை அழற்சி மற்றும் சூடு பிடித்தலை குணமாக்குவது எப்படி

images

வெயிலில் எங்காவது வெளியே சென்றுவிட்டு வந்தாலோ அல்லது ஊறுகாய் போன்ற அதிக உப்பால் ஆன உணவினை உண்டாலோ சிறுநீர் பாதையில் குத்துவது போன்று தோன்றும் இதை மூத்திரக்கடுப்பு அல்லது சிறுநீர்ப் பாதை அழற்சி என்று அழைப்பார்கள்.

இது நீர்ப்பாதையில் உப்பு தங்குவதால் தோன்றும் தற்காலிக கல் போன்றதாகும். வெகுநேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்து அடக்கிவைத்துக்கொண்டு பின் கழிக்க கூடாது சிறுநீர் வெளியேற்ற வேண்டும் என்று தோன்றியவுடன் உடனே செய்துவிட வேண்டும்.

சிறுநீர்ப் பாதையில் தோன்றும் பாக்டீரியா தொற்றால் இந்தப் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.  நன்கு துவைத்த மென்மையான உள்ளாடைகளை தினமும் மாற்றி அணியவேண்டும்.  பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும் போது உறுப்பை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

ஆண்களை விட பெண்களே அதிகமாக இந்த பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இதன் காரணம் அவர்களது சிறுநீர் துளை சிறியதாக இருப்பதால்தான்.  மேலும் இது போன்று பிரச்சினைகள் தோன்றும் போது அதற்கான நோய் நீக்கும் வழிகளை உடனே செய்து கொள்ள வேண்டும்.  இல்லாவிடில் இது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

சிறுநீர் எரிச்சல் ஏற்பட்டவுடன் உடனே வெந்நீரை நிறைய குடிக்க வேண்டும். பின்னர் வெப்பம் அடிவயிற்றில் ஏற்பட்டால் சிறுநீரகம் துரிதமாக செயல்பட்டு அதிக அளவில் சிறுநீரை வெளியேற்றும் இதில் கற்கள் மற்றும் உப்பு படிமங்கள் அதிகமாக வெளியேற்றப்படும். சாப்பிட்டபின் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும்.  அது வெந்நீராக இருந்தால் நலம்.

தற்காலிகமாக எரிச்சல் உடனே நின்று விடும் பின்னர் குளிர்ந்த நீர் அல்லது எலுமிச்சை சாற்றை பிழிந்து சர்பத் தயார் செய்து குடித்துவிட்டு உறங்கவும்.  ஆனால் வாரத்தில் இரண்டு நாட்கள் கொள்ளு, வாழைத்தண்டு சமைத்து சாப்பிடவும் அதிகமாக சிறுநீரை பெருக்கி சிறுநீர் பாதையை சீராக்கிவிடும்.

காலையில் எழுந்தவுடன் காபிக்கு முன்னால் ஒரு சொம்பு வெந்நீரை குடித்தால் அதிவேகமாக சிறுநீர் தயாரிக்கப்பட்டு சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும். அதில் மாசுக்கள் அனைத்தும் வெளியேற்றபடும். சிறுநீர் பிரச்சினைகள் பிராணன் உள்ள வரை சீண்டாது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.