செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து விட்டதா பீதியில் மக்கள்

Redhills_Lake

சென்னையில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை எண்பதையும் தாண்டிவிட்டது இன்று 20 உடல்களை மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.  மேலும் சென்னைக்கு தண்ணீர் தரும் ஏரி, குளம், ஆறுகள் என்று அனைத்தும் நிரம்பி வழிந்து ஒடுகின்றது.  இந்த நிலையில் சென்னையில் மக்கள் தண்ணீரில் உடமைகளையும் உயிர்களையும் விட்டு விட்டு தனியாக நிற்கின்றனர்.

ஏரிகளை சுற்றியுள்ள ஒரு நிலப்பகுதி கூட மிஞ்சவில்லை அங்கிருந்து மக்கள் வெளியேறிவிட்டனர்.  செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து முழு வேகத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  ஏரி உடைந்து விட்டது என்று மக்கள் எண்ணி மேலும் பீதியில் உள்ளனர்.

இதனால் ஏரி உடையவில்லை தண்ணீர் அதிகமாக வெளியேற்றுகின்றோம் இல்லையெனில் கரை வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று மக்களுக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்றைய சூழ்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்  ஏரியில் குறைந்து வருவதால் தண்ணீர் திறந்து விடப்படும் அளவும் குறைந்துள்ளது.  மேலும் மழை பெய்தால் மறுபடியும் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படும் என்று கூறியுள்ளனர்.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.