சென்னையில் இருந்து சில மாவட்டங்களுக்கு இலவசமாக பேருந்துகள்

chennai bus

வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 10 ல் ஆரம்பித்து ஒரு மாதம் பெய்தது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த காற்று அழுத்த தாழ்வால் சென்னை மட்டும் கடலூர் போன்ற கடலோரை மாவட்டங்களில் கொட்டி தீர்த்தது மழை.

தீபாவளியை அடுத்து மீண்டும் வேலைக்கு சென்றவர்கள் தங்கள் அறையை விட்டு வெளியே கூட வர முடியாததால் மீண்டும் வேலைக்கு விடுமுறை அளித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை முழுவதும் முதல் தளம் வரைக்கும் தண்ணீர் வந்து விட்டது மட்டுமல்லாமல் கூவம் மற்றும் அடையாறு மற்றும் ஏரிப்பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு விட்டது.

இதனால் மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் தவிக்கின்றனர். சென்னைவாசிகளே உணவையும் பொருளையும் இழந்து நிற்கையில் வெளியூர் வாசிகள் அறைகளை விட்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகின்றனர். ஆனால் சாலைகளில் தண்ணீர்  வருவதால் மாற்றுப்பாதைகளில் பேருந்துகள் மற்றும் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

மேலும் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனியார் வாகனங்கள் மற்றும் பேருந்துக்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.  மேலும் வேலைக்காக சென்றவர்கள் வேலையில்லாமல் இவ்வளவு நாள் தங்கிருந்து கையில் உள்ள பணங்கள் செலவிட்டதால் ஊருக்கு வரக் கூட பணமில்லாமல் தவித்து நிற்கின்றனர்.

அதை கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் பிற மாவட்டங்கள் செல்லும் அனைத்து அரசு பேருந்துகளையும் இலவசமாக வழங்கப்பட அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் அனைத்து மக்களும் இந்த சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கரம் செய்யுங்கள் என்று அறிவுறுத்துகின்றனர்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.