பச்சை குத்துவது மற்றும் உடலில் டாட்டூ வரைவது நல்லதா

396501521_69tYP-M

பச்சை குத்துவது அல்லது டாட்டூ வரைவது இப்போதெல்லாம் ஒரு FASHION ஆக மாறிவிட்டது.  நமக்கு பிடித்த கடவுள் மற்றும் பெயரை பச்சையாக உடலில் குத்திக்கொள்வார்கள்.  இது மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டவும் மற்றும் மற்றவர்களுக்கு ஏதோ ஒரு செய்தியை வெளிப்படுத்தவும் டாட்டூ குத்துகின்றார்கள்.

டாட்டூ குத்துவது என்பது பச்சைக்குத்துவதை  விட பாதுகாப்பானது.  டாட்டூ என்பது ஒரு ஒட்டி (ஸ்டிக்கர்) இது தோலில் குத்திய ஒரு வாரத்திற்குள் அல்லது தேய்த்துக் குளித்தாலோ சென்றுவிடும்.  ஆனால் பச்சை என்பது அப்படி கிடையாது.  முன்றைய காலத்தில் பச்சிலைகளை அரைத்து திரவம் போல் கரைத்து நீண்ட கூர்மையான ஊசியைக் கொண்டு பெயரை அல்லது படத்தை மார்பு அல்லது உடலின் மற்ற பாகங்களில் வரைந்து பின் பச்சிலையை அதில் ஏற்றுவர்.

பச்சிலை திரவம் தோலின் அடிப்பாகத்தில் சென்று அங்கேயே தங்கிவிடும்.  மேல் தோலில் உள்ள காயம் ஆறியப் பின்பும் பச்சிலை திரவம் காய்ந்து தோலில் தங்கிவிடும்.  இந்த பச்சிலை திரவம் வாழ்நாள் முழுவதும் மறையாமல் இருக்கும்.

பாதிப்புகள்

1.  பச்சை குத்துவது ஒரே ஊசியைப் பயன்படுத்தி செய்வர் இதனால் தொற்று நோய்கள் ஏற்படும்.  பொதுவாக திருவிழாக்களில் குரவர்களிடம் குத்தப்படும் பச்சை பாதுகாப்பானது கிடையாது.

2. பச்சை குத்த இப்போது பாதரசம் கலந்த கலர்கள் பயன்படுத்தப்படுகின்றது. இது தோல் புற்று நோயை உருவாக்கிவிடும். பச்சை குத்தும் போது உருவாக்கப்படும் புண்கள் ஆறுவதற்கு வெகு நாட்கள் ஆனால் கண்டிப்பாக மேற் சிகிச்சை செய்து கொள்ளவேண்டும்.

3. சீழ் பிடித்துக் கொண்டால் சில நாட்களில் அந்தப் பகுதி அழுக ஆரம்பிக்கும். உடனே வேப்பிலை அரைத்துப் பூச வேண்டும்.

4. மருந்தின் தாக்கம் அதிகமானால் காய்ச்சல் வரும்.

5. நவீன யுகத்தில் பச்சை குத்துவதற்கு என்று நிறைய இடங்கள் உள்ளது அங்கு முதலில் பச்சை குத்துவது உடலுக்கு ஏதுவானதா என்று சோதித்தப்பின்னர் மென்மையாகவும் தூய்மையாகவும் இந்த பச்சையை குத்திவிடுவார்கள்.

6. கவனம் இப்போது ராணுவத்தில் கூட பச்சைக் குத்தியவர்களை சேர்ப்பதில்லையாம்.

பச்சையை நீக்க வழிகள்

1. பச்சையை நீக்க் சித்ரமூலி வேரை அரைத்து பச்சை மேல் போட்டால் புண் உருவாகும் பின்னர் பச்சை திரவம் வெளியேற்றப்படும்.

2. குண்டு மணிப் பருப்பை அரைத்து பற்று போட்டாலும் பச்சை மறைய ஆரம்பிக்கும்.

3. சிரட்டைத் தைலமும் இது போன்றுதான்.

இந்த பச்சையை குத்துவதால் எவ்வித நன்மையும் விளையப்போவதில்லை சிலர் இதை வேடிக்கையாகவும் சிலர் கொள்கைகளை பரப்புதல் போன்றவைகளுக்காவும் சிலர் விரும்பியவர்களின் பெயர்களை வெளிக்காட்டவும் செய்கின்றனர்.  ஆனால் இது முழுக்க முழுக்க உடலுக்கு நல்லதல்ல.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.