மாதவிலக்கின் போது தோன்றும் வலி குறைய ஈவ்னிங் பிரைம் ரோஸ்

evening prime rose

பெண்கள் பருவமடைந்த நாள்முதல் மாதம் தோறும் தோன்றும் மாதவிலக்கு சரியாக இருக்க வேண்டும். இந்த மாதவிலக்கு மாதந்தோறும் நடந்தால் உடல் நலமாக இருக்கும்.  இந்த மாதவிலக்கில் ஏதாவது சிக்கல் இருந்தால் பாதிப்பு பெரிதாக இருக்கும்.

மேலும் ஒரு மாதத்தில் பெண்ணானவள் 20 நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளாள். மேலும் மீதியுள்ள நாட்களில் மாதவிலக்கின் முன் பின் பிரச்சினைகளை எண்ணி சங்கோஜம் மற்றும் மன உபாதைகளை ஏற்படுத்திக் கொள்கின்றாள்.imagessssss

மாதவிலக்கு ஏற்பட்டதும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்குள் மாதந்தோறும் பிரச்சினைகளை அனுபவிக்கின்றாள்.  அதனுடன் வீட்டு வேலைகள் அலுவலக வேலைகள், குழந்தைகள், சமுதாயம் என்று பல வேலைகளையும் கவனித்துவருகின்றாள் இந்த வேதனைகளையும் தாங்கிக் கொண்டு.

இதனால் சில பெண்கள் மற்றவர்களின் மீது ஒரு வெறுப்புடனும் எரிந்து விழுவது போன்று பேசவும் செய்கின்றார்கள்.  மூலம் வந்த ஆண்களின் நிலைமையை நினைத்து பாருங்கள் ஒவ்வொரு முறையும் நாம் வலியின் உச்சக்கட்டத்தை தொட்டுவிட்டு வருவோம் அது போல் தான் மாதவிலக்கும்.

இந்த வலி, நீர்க்கசிவு மற்றும் தொற்றுப்புண்கள்  ஆகியவை பெண்ணின் உணவுப்பழக்கம் மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்தது.  அதை தவிர்க்க பெண்ணுக்கு அதிகமாக கால்சியம் மற்றும் இரும்புச் சத்து முக்கியம்.   அவரது உடல் பலத்தைப் பெற்றிருந்தால் வலி ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்வார்கள்.download evening prime rose

இந்த  பிரச்சினையை தவிர்க்க பெண்கள் அதிகமாக இனிப்பு மற்றும் மைதா மாவு கலந்த உணவுப் பண்டங்களை தவிர்க்க வேண்டும்.  அதிக குண்டாகவோ அல்லது அதிக ஒல்லியாகவோ இருக்கக் கூடாது.

அதனால் சீரான உடல்வாகை தொடர்ந்து பராமரித்து வர வேண்டும்.  எளிய உடற்பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகள், தினமும் நடைப்பயிற்சி.  மேலும் ஒரு மருந்தும் பெண்களுக்கு இருக்கின்றது.

இது மெடிக்கலில் கிடைக்கும் EVENING PRIME ROSE என்ற மருந்து.  இதை டாக்டரிடம் கேட்டுக்கொண்டு வாங்கி பயன்படுத்தவும்.  டாக்டரிடம் உடலை சோதிக்காமல் இதை சாப்பிடவேண்டாம்.

இந்த மருந்து இளம்பெண்கள் முதல் முதிற்கன்னிகள் வரை அனைவரையும் பாதுகாக்கும்.  பயன்படுத்திப் பாருங்கள்.

பெண்கள் காபி, தேனீர் மற்றும் இனிப்புகளை குறைத்தல் நலம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உணவுகளை உண்ண வேண்டும்.  குளிர் காலங்களில் மிதமான வெப்ப உணவுகள் சாப்பிட வேண்டும். வெப்ப காலத்தில் குளிர்ந்த உணவுகளான தயிர், மோர், பதநீர் போன்றவைகளை உட்கொள்ள வேண்டும்.  அடிவயிறு சூட்டினை குறைக்க வேண்டும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.