இயர் அட்டாக்-காதடைப்பு

imagesxx

மாரடைப்பு போல் காதடைப்பும் உள்ளது இந்த அடைப்பு வந்தால் திடீரென்று காது கேளாது அல்லது ஒரு காது மட்டும் கேட்காது.  பெருகி வரும் வாகன இரைச்சலில் நாம் தினமும் பல்லாயிரக்கணக்கான இரைச்சல், சத்தம் கேட்டு வருகின்றோம் ஆனால்  அதையெல்லாம் நம் காதுகள் கேட்டு கேட்டு பழகிவிடும்.

அதனால் காதடைப்பு வராது.  மூச்சுக் குழாயில் ஏற்படும் அடைப்பு மற்றும் வேகமான தும்மலின் போது மூக்கடைத்துக்கொண்டால் காதில் அடைப்பு ஏற்பட்டு உடனே கேட்கும் திறனை இழந்துவிடும்.

இப்படி ஏற்பட்டால் உடனே நாம் மருத்துவரை அணுக வேண்டும் காதுகளில் தண்ணீர் விட்டு பார்க்கவேண்டும்.  வேறெதுவும் செய்ய வேண்டாம் அலட்சியம் செய்ய வேண்டாம் உடனே தீர்வை பாருங்கள்.

காதுகளில் உள் நடு வெளி என்று மூன்று பகுதிகள் உள்ளன அதில் உள் காதில் தான் அந்த திரை உள்ளது அதில் தான் எப்போதும் சிழ் அல்லது காதடைப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

பைக்கில் செல்லும் போது காதுகளை மூடிக்கொள்ளம் காதடைப்பான் அல்லது ஹெட்போன் போன்றவைகளை அணிந்து காற்று செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகள் (1-4) வயதுள்ளவர்களின் காது சவ்வு உதிய பலூனை விட மென்மையானது அவர்களின் காதை பாதுகாக்கவும்.  ஹெட்போன் தியேட்டர் சவுண்ட்.  திருவிழா ரேடியோ போன்றவைகளின் சத்தத்தை தவிர்த்து விடுங்கள். சிறுவயதில் நாம் செய்யும் பிழையால் பாவம் அவர்களின் வாழ்க்கை ஊமையாகிவிடும்.

 

காதுகளில் எண்ணை மற்றும் சோப்பு நுரை வேண்டாம் காதுகளில் ஏதாவது அழுக்கிருந்தால் பட்ஸ் கொண்டு தண்ணீரில் நனைத்து மெதுவாக வெளிப்புறமாக எடுக்கவும்.

உட்புறம் அழுக்கிருந்தால் மருத்துவரை மட்டுமே அணுகவும்…..

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.