பசி இல்லையா இதை பின்பற்றுங்கள்

Tiruchirapalli-Rock-Fort,-Tamil-Nadu-India-c1869

மருத்துவத்தில் ஒரு வேளை உண்பவன் யோகி இரண்டு வேளை உண்பவன் ரோகி மூன்று வேளை உண்பவன் போகி என்பார்கள் ஆனால் உடல் உழைத்து சம்பாதிக்கும்  மனிதன் ஒரு வேளை உண்டு விட்டு வேலை செய்ய முடியாது சும்மா உட்கார்ந்திருப்பவர்களே அந்தந்த நேரத்தில் பசியெடுத்தால் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

சிலருக்கு வேளைக்கு பசிக்காது காலையில் சாப்பிட வேண்டிய சாப்பாட்டினை மதியம் தான் சாப்பிடுவார்கள் மதியம் சாப்பாடு நான்கு மணியைத் தொட்டு விடும் இது சரியல்ல.

மேலும் காலையில் சரியாக 7.30 மணியில் இருந்து 9.00 மணிக்குள் காலை சாப்பாடு அதிகமாக சாப்பிட வேண்டும்.  இது சிற்றுண்டியாகவோ அல்லது முழுச்சாப்பாடாகவோ இருக்க வேண்டும்.

காலையில் எழுந்தவுடன் எந்த விதமான புளிப்புச் சுவையுடைய பழங்கள் சாப்பிட வேண்டாம்.  அவைகள் வயிற்றில் சென்று பாழ் செய்து விடும்.  புளித்த ஏப்பம் வர வைத்துவிடும்.. வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் அதிகமாக உண்ண வேண்டாம். செரிக்க உணவிருந்தால் உணவை செரிக்கும்.  இல்லையேல் உடலை செரித்துவிடும்.

மதியவேளையில் காலையில் சாப்பிட்ட சாப்பாட்டில் பாதிக்கும் அதிகமாக உணவு உண்டால் போது மானது.  இந்த மதிய உணவு பெரும்பாலும் சோறாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் முழு உணவு வேண்டாம். கண்டிப்பாக இரசம் தயிர் இருக்க வேண்டும்.  சிலர் கட்டுச்சாதம்.(புளியோதரை, தக்காளிசாதம், எலுமிச்சை) போன்ற சாதங்கள் சாப்பிட்டால் கண்டிப்பாக இஞ்சி மிட்டாய் சாப்பிடலாம்.  குறைவாக உண்டுவிட்டு சிறிது நடக்கவேண்டும். அல்லது குட்டியாக தூங்கலாம்.   வேலை நேரத்தில் உறங்க வேண்டாம்.

இரவில் எளிமையான உணவைத்தவிர வேறு எதுவும் வேண்டாம் வாழைப்பழம் போன்ற பழங்கள் சாப்பிடுவது மலச்சிக்கலை தவிர்க்கும்.  சோறு சாப்பிட்டால் இரசத்தில் சாப்பிடவும்.  மதிய உணவில் பாதியை உண்ணவேண்டும் இரவில்.  அது போதும் ஏனென்றால் செரிமானம் ஆக நாம் வயிற்றுக்கு ஒய்வுகொடுக்க வேண்டும். இரவு சாதம் உண்ணவில்லை என்றால் வயிறு நள்ளிரவில் வலித்து தூக்கத்தை கெடுத்துவிடும். பட்டினி வேண்டாம் முடிந்த வரை ஒரு டம்ளர் பாலையாவது குடிக்கலாம். தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்னர் உணவு உண்டிருத்தல் வேண்டும்.  இல்லையேல் செரிமானம் அகாது.

இவ்வாறு சரிவிகித உணவு உண்ணுங்கள் அது போதும்.  மூன்று வேளையும் இறைச்சி மற்றும்  முட்டை போன்றவை வேண்டாம் மதியம் சாப்பிடுங்கள் அதுவும் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளுங்கள் நமது உடல் உணவுக் குழாய் அசைவத்திற்கு ஆனது கிடையாது சைவ உணவுகள் செரிப்பதற்கு.  அதனால் அசைவம் சாப்பிட்டால் குறைந்தது 1 நாள் உபவாசம்(நோன்பு) இருக்க வேண்டும்.

இந்த உணவு முறைகள் அவ்வளவும் பசியை தானாக தூண்டக்கூடியது.  மேலும் சிலருக்கு வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் காலையில் கொத்தமல்லி தளை கீரையை துவையலாக்கி சாப்பிடுங்கள்.  மதிய வேளை எப்படா வரும் சாப்பிடலாம் என்று கடிகாரத்தை பார்த்துக்கொண்டே இருப்பீர்கள்.

மேலும் தீராத அஜீரணத்தால் அவதிபட்டால் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் இரண்டு மிளகு ஒரு உப்புக்கல் வைத்து  உமிழ்நீர் பட மென்று விழுங்கி விடுங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் ஆனால் வயிறு சோறு சோறு என்று பிடுங்கி எடுத்துவிடும். பக்கத்தில் உள்ளவர்கள் ஸ்நாக்ஸ் போன்று தெரிவார்கள்.

தினமும் சீரக ரசம் வைத்து உணவுக்குப்பின் இரு கரண்டி பருகுங்கள் தானாகவே பசிக்கும்.  பசிக்காமல் சாப்பிடும் எதுவும் உணவாகாது……ருசிக்காக மட்டுமே சாப்பிடத்தோன்றும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.