பெண்களுக்கு முகத்தில் முடியை அகற்ற

128575731

ஆண்களுக்கு முகத்தில் மற்றும் கை கால்களில் முடிவருவது இயற்கை தான் ஆனால் ஆண்களிலே சிலருக்கு தாடி மீசை கூட வளராது.  அது அவர்களின் ஹார்மோன் மாற்றமாகும்.  சிலருக்கு ஜீன்களால் கூட இந்தப்பிரச்சினை இருக்கலாம்.

ஆனால் பெண்களில் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட பருவ வயதைத் தொட்டவுடன் அவர்களது முகம் மற்றும் கைகளில் முடி வளர ஆரம்பிக்கும்.  இதை ஆரம்பத்திலேயே தவிர்த்தல் மிக நல்லது இல்லையேல் மீசை தாடி வளரும் பின் லேசர் சிகிச்சை செய்யவேண்டி வரும்.

வாரத்தில் இரு நாட்கள் கஸ்தூரி மஞ்சள் தேய்த்து குளிக்கவேண்டும்.  எக்காரணம் கொண்டும் முடிகளை மழிக்கவேண்டாம்.  இது பூனைமுடிதான் எளிதாக இதை நீக்கி விடலாம்.

தேங்காய் எண்ணையை தோல் மீது தடவ வேண்டாம்.  மேலும் இந்த முடி வளருவது ஹார்மோன் பிரச்சினைதான்.  அவர்களுக்கு கழிவுப் பொருட்கள் அதிகமாக வெளிவருகின்றது.  சில கிரீம் கள் கூட முடியை வளர்க்க காரணிகளாக உள்ளது.

தினமும் வேப்ப இலை கொழுந்து, குப்பை மேனி இலை, விராலி மஞ்சள் இவைகள் மூன்றையும் பதமாக அரைத்தப்பின் நன்றாக மேனி முழுவதும் பூசி விடவும். பின்னர் காயவைத்து குளித்து வரவும். இப்படி செய்தால் பெண்களுக்கான தோல்களில் முடி வளரும் பிரச்சினைகள் நீங்கிவிடும்.

downloadkas

பின்னர் தோள் பளப்பளப்பாக காட்சியளிக்க மற்றும் மிருதுவாக தெரிய கொத்தமல்லி இலையுடன் கஸ்தூரி மஞ்சள் கலந்து அரைத்து மேனியில் பூசவும். மேனி பளப்பாக மிளிரும்.

ஆண்களுக்கு மீசை தாடி வளர வேண்டுமெனில் தினமும் இரவு தூங்கும் போது விளக்கெண்ணையை மீசை மற்றும் தாடிமீது தடவி வந்தால் பூனை முடி விழுந்து நன்றாக மீசை வளரும்.  மேலும் அடிக்கடி சவரம் செய்து கொண்டே இருக்கவும் டிரிம்மிங் செய்யவேண்டாம்.  கண்டிப்பாக பலன் கிட்டும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.