ஜீரணம் தரும் சீரகம்

images (98)

 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமயல் பொருட்களில் சீரகமும் ஒன்று அந்த சீரகம் நிறைய மருத்துவக்குணங்களை உள்ளடக்கியது.

1.ரத்தத்தோடு வரும் மூலத்தை நீக்க சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

2. தீராத வயிற்று வலி சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் உடனே தீரும்.

3. குக்கல் (இருமல்) சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

4. வெகுநேர விக்கல் மற்றும் தாகம் தீர சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
5. மூலத்தால் அவதியா? சீரகத்தை அரைத்து மூலத்தின் முளைப்பகுதியில் பூசினால் மூலம் வற்றும்.

6. அரிப்பு நோய் நீங்க சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

7. தினமும் இரவு சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.

8. பித்தம் குறையவும் பித்தத்தால் வாந்தி மயக்கங்களை தவிர்க்கவும் சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.

9. பித்தம் நீங்க நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.

10. விஷக்காய்ச்சல் மற்றும் தேள், பூரான் விசம் நீங்க சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

11. பசியெடுக்க சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

12. தாதுச்சத்து அதிகமாக சீரகம், வில்வவேர்ப்பட்டையை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.