மழை வெள்ளம் பூகம்பம் போன்றவற்றிலிருந்து வீட்டை பாதுகாக்க ஹவுஸ் ஹோல்டர் பாலிஸி

images (96)

நாம் நன்றாக வாழ எத்தனையோ பாலிஸிகள் நாம் கண்டிருப்போம்.  அந்த கொள்ளைகள் அனைத்தும் நம் வாழ்க்கைக்குப் பிறகும் நாம் வாழ்வதற்கும் தான் உதவி செய்கின்றன.  இந்த வகையில் தான் ஹவுஸ் ஹோல்டர் பாலிஸி.  இது அதிகமாக யாராலும் பயன்படுத்தாத பாலிஸி தான் ஆனால் இப்போது பெய்து வரும் கனமழையால் வீட்டை இழந்த மக்களும் பூகம்பம் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் வீட்டை இழந்தவர்களும் இதை நினைத்து நொந்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த ஹவுஸ் ஹோல்டர் பாலிஸி நம் வீட்டை சரிசெய்கின்றது.  வீடு இயற்கை விபத்துக்களால் பாதிப்படைந்தாலோ அல்லது தீவிபத்தால் பாதிப்படைந்தாலோ உடனே இதற்கான இழப்பீடு வங்கி கொடுத்து விடுகின்றது.

இதை எல்லோரும் எடுக்கவில்லையே என்று கவலையில் உள்ளனர்.  இந்த ஹவுஸ் ஹோல்டர் பாலிஸி கீழ் கண்டவற்றில் இருந்து வீட்டை பாதுகாக்கின்றது.

1. தீ விபத்து,

2. வீடு பாதிப்படைவது,

3. அனைத்து வகையான ரிஸ்க்கும் கவர் செய்வது,

4. வீட்டில் இருக்கும் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்றவற்றுக்கான கவரேஜ்,

5. லேப்டாப், கம்ப்யூட்டர்,

6. தங்க நகைகள் மற்றும் ரொக்க கையிருப்பு

என்ற அனைத்திற்கும் பாதுகாப்பு அளிக்கின்றது.  அவை அனைத்திற்கும் தனித்தனியே பாதுகாப்புக் கொள்கைகள் உள்ளன.

இந்த பாலிஸியின் பிரீமியம் தொகையும் குறைவுதான் எதன் மீது பாலிஸி எடுக்கின்றீர்களோ அந்த பொருளின் மொத்த விலையில் 2-3 சதவீதம் தான் இருக்கும்.  பாலிஸி நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடலாம்.  ஆனால் இழப்பீடு பெறுகையில் அதற்கான படிவங்கள் மற்றும் சாட்சியங்களை காட்டினால் உடனே இழப்பீடு தரப்படும்.

இனிமேலும் தாமதிக்காமல் அருகில் உள்ள கிளைகளை அனுகி விசாரித்து இந்த மாதிரி உபயோக மான பாலிஸிகளை போட்டு வையுங்கள் நாம் நன்றாக வாழ்வதற்காகத்தான் இந்த திட்டங்கள் எல்லாம் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.