பனிக்காலத்தில் உடலைப் பாதுகாக்க

images (94)
தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப உடலை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் வெப்பக் கோடை காலத்தில் உண்ண வேண்டிய உணவுகளை பனிக்காலத்தில் உண்ணக் கூடாது அந்த உணவுவகைகள் உடலுக்கு ஏற்றவை அல்ல.
அதே சமயம் பனிக்காலத்தில் செய்ய வேண்டிய உணவுகள் கோடைகாலத்தில் உண்டால் மேலும் சூடு தாக்கும்.
பொதுவாக பனிக்காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும் இதனால் காலையில் கண்டிப்பாக வெது வெதுப்பான நீரில் குளிக்கவேண்டும்.  மேலும் நன்றாக வேகவைத்த உணவுகளை உண்ண வேண்டும். 

குளிர் அடிக்கும் இந்த வேளையில் கண்டிப்பாக ஜூஸ் சாப்பிடக் கூடாது.  குளிர்ந்த இந்த ஜூஸ் உடலைத்தாக்கி சளிப்பிடித்துக்கொள்ளும். அவ்வாறு சளிப்பிடித்தால் ஒரு வாரத்திற்கு விடாமல் தாக்கும். 

துளசி இலைகளை தினமும் பறித்து உண்ணவேண்டும் உடலை சூடாக வைத்துக்கொள்ள வேண்டும்.  மக்காச்சோளம் போன்ற வேகவைத்த உணவுகளை திண்பன்டமாக உட்கொள்ளலாம்.

தினமும் சாப்பிடும் சாப்பாட்டையே சூடு ஆறும் முன்பு சாப்பிடுவது நல்லது. அப்படி சாப்பிட்டால் தான் உடலுக்கு நல்லது.  காபி டீ போன்றவைகள் எப்போதும்போல் தான்.

இந்த மூன்று மாதங்கள் (நவம்பர், டிசம்பர், ஜனவரி) மிகுந்த குளிரடிக்கும்.  இந்த நாட்களில் குளிர் மிக அதிகமாக இருப்பதால். காய்ச்சல் சளி போன்ற குளிர் வியாதிகளுக்கு வழி வகுக்கும்.

வெளியில் வெறும் தலையுடன் செல்ல வேண்டாம் குல்லா அணியாமல் செல்லவேண்டாம் அல்லது காதுகளை அடைக்கும் மப்ளர் போன்றவற்றை அணிந்துக் கொண்டு போகலாம்.

தலைக்கு தேய்த்து குளித்தவுடன் திருநீறு அல்லது சாம்பிராணி போட்டு நன்கு தலையை துவட்டி ஈரத்தை போக்கவும்.

இவ்வாறு செய்தோமானால் பனி நம்மை டச் கூட பண்ணாது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.