மாங்கொட்டை பலன்கள்

dowssnload

நாம் எல்லோருக்கும் மாம்பழம் என்றால் ரொம்பப் பிடிக்கும் மாம்பழத்தின் சுவை மறக்க முடியாதது. எல்லோருக்கும் விருப்பமான மாம்பழத்தை தின்றவுடன் கொட்டையை சப்பிவிட்டு தூக்கி போட்டுவிடுவோம் ஆனால் அந்த கொட்டையில் நிறைய மருத்துவங்கள் நிறைந்துள்ளது என்பது பலருக்கு தெரியாது.

பெரும்பாடு எனும் அதிக உதிரப்போக்கு

சில நடுத்தரவயது பெண்மணிகளுக்கும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் அல்லது மெனோபாஸ் நெருங்கும் தாய்மார்களுக்கும் அதிக உதிரப்போக்கு ஏற்படும் கவனிக்காமல் விட்டால் அது கட்டியாக மாறிவிடும்.  பின் புற்றுநோயாக வளர்வது சாத்தியம் தான்.  பின் கற்பப்பையினை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடவேண்டும். இந்த அதிக உதிரப்போக்கினை கட்டுப்படுத்த மாங்கொட்டையின் மேல் தோலை உரித்துவிட்டு அதில் உள்ள பருப்பினை எடுத்து அதை காயவைத்தபின் இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் தேனில் கலந்து (உதிரக்காலங்களில்)  சாப்பிட்டு வந்தால் அடிவயிற்று வலி மற்றும் உதிரப்போக்கு கட்டுப்படும்.

சீதபேதி, வயிற்றுப்போக்கு குணமாக

தொடர்ந்து வயிறு வலித்து வலித்து கழிச்சல் இருந்து கொண்டே இருந்தால் அது சீதபேதி.  மேலும் கழிச்சலில் சலி போன்று திரவம் வந்தால் வயிற்றில் சூடு காரணமாக சீத பேதி ஏற்பட்டிருக்கலாம் அதற்கு மாம்பருப்பு, கசகசா, சுக்கு, ஓமம்  இடித்து அரைத்து எலுமிச்சை சாற்றுடன் ஒரு அரை அரைத்து மோரில் அல்லது ஆறிய வடிகட்டிய கஞ்சியில் கலந்துண்ண சீதபேதி குணமாகும்.

இரத்த மூலம் குணமாக

இரத்த மூலம் குணமாக வழிகள் மாங்கொட்டையின் உட்பருப்பை எடுத்தி உலர்த்தி இடித்து தூள் செய்து அரை டீ-ஸ்பூன் அளவு எடுத்து அதை ஒரு டம்ளர் தயிரில் கலந்து தினமும் காலை மாலை சாப்பிட்டு வர கொடூரமான இரத்த மூலத்தை அடியோடு அகற்றிவிடலாம்.

இத்தனை பலன்களைத் தரும் மாங்கொட்டையை இனிமேல் தூக்கி எறியாதீர்கள்….

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.