மருவை நீக்க எளிய வைத்தியங்கள்

large-skin-tag

மரு தோன்றுவது இயற்கைதான் வேண்டாத திசுக்கள் ஒன்றாக இணைந்த கொப்புளம் போல் உருவாவது தான் மரு.  ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் மரு கொப்புளத்தைவிட மெதுவாகத்தான் வளரும்.  கொப்புளம் உடைந்துவிடுவது போல மரு வளராது நாம் உயிரோடு இருக்கும் வரை நம் உடன்தான்.   சிலரது அடையாளங்களே மருவை வைத்துதான் பிடிப்பார்கள்.

மரு எங்கு தோன்றினாலும் பெரிதாக தெரிவதில்லை ஆனால் முகத்தில் தோன்றினால் எப்படியாவது நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதை கிள்ளிவிட்டால் அந்த ரத்தம் படும் இடமெல்லாம் மரு உருவாகி தொந்தரவு செய்யும்.

மருவை நீக்க இயற்கை வழிகள் சில கொடுக்கப்பட்டுள்ளன

1. ஆளி என்ற விதையை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி தினமும் பருவில் தடவிவர வேண்டும். அவ்வாறு தடவி வந்தால் மரு நாளடைவில் கொட்டிவிடும்.  பேஸ்டை தடவி விட்டு அதன் மேல் பேண்டேஜ் ஒட்டினால் மிக நல்லது.

2. பூண்டு பல்லை நன்றாக பேஸ்ட் போல் ஆக்கி அதை மரு இருக்கும் பகுதிகளிலும் மருவின் மீதும் தடவி விட்டு அதன்மேல் பேண்டேஜ் ஒட்டிவிடவும்.

3. அன்னாசிப்பழம் அல்லது அன்னாசி சாற்றினை மருவின் மீது தடவி வந்தால் கொட்டிவிடும்.

4. கற்பூர எண்ணையை தினமும் மருவின் மீது  தடவி வர மரு நாளடைவில் கொட்டிவிடும். மேலும் மருக்கள் வளராமல் தவிர்க்கலாம் கற்பூர எண்ணை கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் குழைத்தும் பூசலாம்.

5.சுண்ணாம்பை நன்றாக குழைத்து மருவின் மீது தடவி வந்தால் மரு தானாக பொரிந்து விழுந்துவிடும்.

6. உருளைக்கிழங்கினை மசித்து பசை போல் ஆக்கி தினமும் தடவி வர மரு பொரிந்துவிடும்.

7. பெரிய மருக்களை நீக்குவதற்காக பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டும் என்ற தேவையில்லை. அதற்கு அம்மான் பச்சரிசி என்ற மூலிகையுள்ளது.  இது மணற்பாங்கான இடங்களிலும் வயல் காட்டிலும் விளையக்கூடியது.  பூமியின் மீது படர்ந்திருக்கும்.  இத்தாவரத்தை கிள்ளினால் அதில் இருந்து பால் வரும்.  அந்தப்பாலை தினமும் மருவின் மீதும் முகப்பருக்கள் மீதும் தடவி வந்தால் முகப்பரு மற்றும் மருக்கள் காணாமல் போகும் கொஞ்சம் அதிகமாக பால் எடுத்து நிறைய மருக்கள் உள்ளபகுதிகளில் தடவினால் முகப்பருக்களோடு சேர்ந்து மருவும் சென்று விடும்.  தடயமும் மறைந்து விடும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.