கால்வலி மற்றும் மூட்டுவலி பாதவலி நீங்க

30-leg-pain-300

வயதானவர்களுக்கும் சரி இளசுகளுக்கும் சரி கால்வலி இயற்கையாக ஏற்படுவதுண்டு. வயதானவர்களுக்கு வயோதிகத்தால் தான் மூட்டு வலி வரும்.  இளமையில் கால்வலி மூட்டுவலி வந்தால் அலட்சியம் கூடாது.

வெகுநேரம் கால்களை தொங்கப்போட்டாலோ அல்லது பயணத்தின் போதோ திடீரென்று செய்யும் உடற்பயிற்சிகளால் கால் வலி வந்துவிடும்.

இது வரை நடந்து பழக்கமில்லாமல் திடீரென்று ஒடுவதாலும் வெகு தூரம் நடப்பதாலும் தான் கால்வலி வருகின்றது.  HIGH Heals  செருப்பு அணிவதாலும்.  புதிதாக ஷூக்கள் அணிவதாலும் குதிகால் (பாதம்) வலி எடுத்துவிடும்.

இந்த கால்வலிக்கெல்லாம் நிறைய தீர்வு உள்ளது.  ஆனால் இரத்தம் கட்டிக்கொண்டு வரும் கால்வலிக்கு ஒரே ஒரு தீர்வு தான் உள்ளது.  வாளி வெந்நீரில் சிறிது ஆர்.எஸ்.பதி தைலம் அல்லது வேறு தைலத்தை போட்டுவிட்டு கால்கைளை வாளியில் வைத்து மிதமாக கைகளால் அழுத்தி கழுவவேண்டும்.  இப்போது இரத்தக்கட்டு கரைந்து விடும்.

தினமும் நடக்க வேண்டும் அப்படி இல்லையெனில் ஸ்கிப்பிங்கயிற்றையாவது தினமும் விளையாடவேண்டும்.  இது போல் செய்தால் தான் கால் வலி வராமல் இருக்கும்.

வயோதிகர்கள் மூட்டுவலியால் மிகுந்த வேதனை படுகின்றார்கள் அவர்களை காக்கவே முடக்கத்தான்  இலையை பறித்து அதை சாறுபிழிந்து சாப்பிட்டாலும் வலி நீங்கிவிடும்.

 

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.