தேன் எனும் தேவ அமிர்தம்

images (89)

தேன் என்பது வேறொன்றும் இல்லை இயற்கை நமக்கு கொடுத்த தேவாமிர்தம் தான்.  நாம் யாராவது அமிர்தத்தை கண்டோமா இல்லை.  அந்த அமிர்தம் தேனாகவும் இருக்கலாம்.  இயற்கை அன்னை நமக்கு வரப்பிரசாதமாக  தேனை அளித்திருக்கின்றது.

தேனில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன அதில் முக்கியமானது கால்சியம் எனும் சுண்ணாம்புச் சத்து இந்த சத்து மனித எலும்புகளில் உள்ளது.  தேனை தினமும் பால் அல்லது வெறும் வாயில் சாப்பிட்டு வந்தால் கால்சியம் சக்தி அதிகரிக்கும்.  உடல் வளர்ச்சியுறும்.  வளரும் குழந்தைகளுக்கு இன்றிலிருந்தே தினமும் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேனை ஊட்டி வளர்த்தால் அவர்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

தேனில் மற்ற ஒரு முக்கியமான சத்துள்ளது அது இரும்புச்சத்து இது உடலுக்கு பலத்தை தருகின்றது. பலவீனமாக இருப்பவர்கள் மற்றும் படுத்த படுக்கையாக இருந்தவர்கள், வெகு நாட்களாக உடல் சரியில்லாமல் இருந்தவர்கள் தினமும் 10 மிலி அளவு தேன் எடுத்து பாலில் கலந்து வர தேறி விடுவார்கள்.

மெக்னீஷியம், விட்டமின்கள், புரதச்சத்து என்று பல்வேறு சத்துக்கள் தேனில் அடங்கியுள்ளது.  தேன் மிக முக்கியமான மருந்துப்பொருள் எல்லா மருந்து (மூலிகை) பொடிகளிலும் தேனை கலந்து சாப்பிடலாம்.

தேள், பூரான் மற்றும் வண்டுக்கடி ஏற்பட்டால் அந்த கடிவாயில் தேனை வைத்து அழுத்தினால் கடுகடுக்கும் வலி குறையும்.

பேரீச்சை பழத்தை துண்டு துண்டாக நறுக்கி தேனில் ஊரவைத்து விட்டு தினமும் சாப்பிட உடல்பலம் மற்றும் ஆண்மை அதிகரிக்கும்.  முகம் பொலிவு பெறும்.

சர்க்கரை நோய் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருந்தால் தான் வரும் ஆனால் தேன் அந்த சுரப்பியை தடுக்கும் வல்லமை பெற்றது.  இதனால் நாவல் பழக்கொட்டையை பொடியாக்கி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஒரு மண்டலத்தில் (48 நாட்களில்) இன்சுலின் சுரப்பி கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.

தேன் முடியில் விழுந்தால் முடி நரைத்துப்போகாது.  முக அழகு நிலையங்களில் தேனை வைத்து முகத்தில் பூசி காய வைத்து பின் கழுவுவார்கள் தேன் முகத்திற்கு வசீகரத்தை தரும்.  இவ்வளவு சக்திவாய்ந்த தேனை எக்காரணம் கொண்டும் சூடான பொருட்களுடன் கலந்து சாப்பிட வேண்டாம்.  தேன் ஒரு வெப்பப்பொருள் சளி, இருமல் உள்ளவர்கள் தேனை சாப்பிட்டால் உடனே குணமடைந்து விடுவார்கள்.

அதே சமயம் தேன் போலியாகவும் தயார் செய்யப்படுகின்றது.  அந்த வகைத் தேன்கள் உடல் நலத்திற்கு தீங்கானது.  வெல்லப்பாகு மற்றும் சர்க்கரைப் பாகு கலர் பவுடர் கொண்டு தயாரிக்கப்படும் தேன் மிகுந்த கேடு தரும் உடலுக்கு.

தேன் ஒரிஜினலா இல்லையா என்று கண்டுபிடிக்க தேனை எடுத்து ஒரு சொட்டு கண்ணாடி பாட்டிலில் நீர் நிரப்பி அதன் மேல் விட்டால் நூல் நூலாக பிரிந்து வந்தால் அது வெல்லப்பாகு.  அதே சமயம் கெட்டியாக போய் அடியில் தங்கிவிட்டால் அது தேன்.

மேலும் ஒரு செய்தித்தாளின் துண்டில் ஒரு சொட்டு தேனை விடவும் தேன் என்றால் அந்தப் பேப்பர் ஊறிப்போகாது அல்லது ஊற நேரம் எடுத்துக்கொள்ளும்.  வெல்லம் என்றால் உடனே ஊறிவிடும்.

ஒரு அசல் தேன் அதிக விலையுடையதாக இருக்கும்.  விலை குறைவாக கிடைக்கின்றது என்று போலியை வாங்கி உடலை கெடுத்து விடாதீர்கள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.