பற்கள் பளிச்சிட வேண்டுமா பல் காறையை போக்க வேண்டுமா

images (86)

ஒருவர் பேசும் நாம் கவனிப்பது அவர்களின் வாயைத்தான் அழகாகவும் தெரிவது பற்கள் தான் பற்கள் வரிசையாகவும் அளவுடையாதகவும் இருந்தால் அழகுதான்.  ஆனால் சிலர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பற்களை பாக்கு , வெற்றிலை சுண்ணாம்பு போன்றவற்றை போட்டும் புகையிலை மற்றும் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகி பற்களில் காறையை உணடாக்கி விடுகின்றனர்.

தீராது தினமும் புகைபிடித்தல் மட்டும் போதை தரும் பாக்கு முதலியவைகள் பற்களில் காரையை உண்டாக்குகின்றது.  தினமும் ஸ்ட்ராங்கான டீயை குடிப்பவர்களக்கு பற்களின் உட்புறம் காரையை உண்டாக்கி மஞ்சள் தன்மையை கொடுத்துவிடும்.

இவையெல்லாம் நீங்க சில குறிப்புகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

1. தேநீர் சாப்பிட்டு பின் பல் துலக்கினால் நல்லது.

2. வீட்டு சாம்பல் அல்லது திருநீரில் பல்லை தேய்ந்தால் பல் பளிச்சிடும்.

3. சிறு வயதில் உருவான வாழைக் காறையை போக்க எலுமிச்சை சாற்றினை பிழிந்து அதில் உப்பு  தூள் உப்பை நன்கு பொடித்து போடவும் பின் அதை பிரஷ்ஷில் தொட்டு துலக்கவும்.  இதை தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்தாலே பல்லில் உள்ள எந்தவொரு காறையையும் நீக்கி பற்களை பளிச்சிட செய்யும். ஆனால் தினமும் செய்யும் போது ஈறுகளை அதிகமாக அழுத்தாமல் மென்மையாக தேய்க்கவும்.  இல்லையெனில் புண்கள் ஏற்பட்டுவிடும்.

4. கரும்பை பற்களால் கடித்து நன்றாக மென்று சாப்பிடவும். கரும்புச்சாற்றில் உள்ள காறையை நீக்கிவிடும்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.