காலை எழுந்தவுடன் சளி தொல்லையா இதை டிரைப்பண்ணுங்க

images (85)

இது பனிக்காலம் அதுவும் மலை வேறு கொட்டித் தீர்க்கின்றது இதனால் பெரியவா முதல் பிள்ளைவாள் வரை அனைத்து மனுசங்களுக்கும் சளிப்பிடித்து விடுகின்றது.  இந்த சளி மிக மோசமானது தான் ஒரு வேலையையும் செய்ய விடாது.  ஒழுதுக்கொண்டே  இருக்கும் இல்லையேல் மூக்கை அடைத்துக்கொள்ளும்.  என்ன மருந்து தேய்த்தாலும் தற்காலிகமாக சரியாகிவிடுகின்றது ஆனால் முழுவதும் குணமடைவதில்லை.

காலையில் எழுந்தவுடன் சளியால் தொல்லையா நேராக அடுப்பங்கரைக்கு சென்று ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் (200 மிலி) தண்ணீர் எடுங்கள்.  அதை அடுப்பில் வைத்து (மெதுவாக) கொதிக்க வையுங்கள்.

தண்ணீர் கொதிக்குமுன்  5 மிளகு, ஒரு பல் சுக்கு (அ) இஞ்சி, முடிந்தால் பனைவெல்லாம் இல்லையேல் வேண்டுமளவு சர்க்கரை.  எல்லாவற்றையும் தண்ணீரில் போட்டு கொதிக்கவையுங்கள் சிறிதளவு தேயிலைத்தூள் போட்டால் டீ மாதிரி தெரியும்.  வடிகட்டி இறக்கி தண்ணீரை பக்கத்தில் வைத்துக்கொண்டு மூக்கில் ஆவிபட குடியுங்கள்.  குடிக்கும் போதே விக்கல் வரும் அந்த விக்கலில் சளி காணாமல் போவது தெரியும் அப்பறம் தண்ணீர் குடிக்க வேண்டிவரும்.

முயற்சிசெய்து பாருங்கள் நன்மை விளையும்.  பனிக்காலங்களில் காதை மூடிக்கொள்ளும் மப்ளர் அல்லது குல்லாவை கண்டிப்பாக போடுங்கள்.  வெந்நீரில் குளியுங்கள்.  குழந்தைகளை வெளியில் எடுத்துச்செல்லாதீர்கள்.  தலையில் அதிகமாக எண்ணை வேண்டாம் குளிர்ச்சி அதிகமாகும்.  தினமும் துளசியை சாப்பிடுங்கள் உடலில் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளும்.

நோயற்ற வாழ்வே……..

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.