இளமையை தக்கவைக்கும் திரிபலா சூரணம்

11695785_1638088409736455_6419419058623901432_n

என்றும் இளமையாக வாழவேண்டும் என்பதுதான் எல்லோரிடமும் இருக்கும் ஆசை அந்த ஆசை டீன் ஏஜ் பருவத்திலோ அல்லது வாலிப பருவத்திலோ வருவதில்லை ஒரே ஒரு முடி வெள்ளையானாலோ அல்லது முடி கொட்டி வழுக்கை விழ ஆரம்பித்தாலோ அல்லது முகத்தில் சுருக்கம் வரத் தொடங்கினாலோ இளமையை பற்றிக் கவலை வந்துவிடும்.

thiribala_2478095f

திரிபலா சூரணத்தில் கலந்துள்ள மூலிகைகள்

ஒவ்வொரு நொடியும் நம் வயது அதிகரிக்கின்றது.  அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.  இளமை முதுமை இரண்டும் தடுக்க முடியாதது.  விதை ஒன்று ஊன்றி வைத்தால் அது செடியாகும் பின் மரமாகும், காய்க்கும், பழுக்கும், பின் அந்த மரம் ஒரு நாளில் கண்டிப்பாக ஓய்ந்து முடிந்துவிடும். இது தான் இயற்கை.

ஆனால் நம் இளமை தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். இது சித்தர்கள் நமக்கு கொடுத்த காணிக்கைகள்.  மலை நெல்லிக்காய் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் ஔவைக்கு அதியமான் கொடுத்த கனி.  அந்தக் கனியை தினமும் சாப்பிட்டு வந்தாலே போதும் உடலில் சுரக்கும் திரவத்தினை கட்டுப்படுத்தும் பின்னர் கூந்தல் மற்றும் கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தினைக் கொடுத்து எப்போதும் கருமையாக வைத்துக்கொள்ளும்.

முகத்தில் சுருக்கம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளும்.  எல்லோருக்கும் தினமும் நெல்லிக்கனி கிடைப்பது கடினம் தான் அதனால் கவலைப்படத் தேவையில்லை நாட்டு மருந்துக்கடைகளில் திரிபலா சூரணம் என்ற மருந்து கிடைக்கும்.  இது நெல்லிக்காய் கடுக்காய் தான்றிக்காய் போன்ற மூன்று பொடிகள் கலந்து கிடைப்பது.

இதை தினமும் இரவு உறங்குமுன் சாப்பிடுவதால் கீழ் கண்ட நன்மைகள் விளையும்

1. திரிபலா சூரணம் நெல்லிக்காயின் நற்குணங்களைக்கொண்டிருக்கின்றது.  இது இளமை, கருங்கூந்தல், தோல் பளபளப்பு, கண்பார்வை கூர்மை போன்றவைகளை கொடுக்கின்றது.

2. கடுக்காய்ப்பொடி மலச்சிக்கலை தீர்க்கின்றது.  காலையில் எழுந்தவுடன் நேற்றை உணவுகளில் செரித்தது போக மிச்சமுள்ள உணவுகள் கழிவு வழியாக வெளியேற்றப்பட வேண்டும் அவ்வாறு செய்யப்படாமல் இருந்தால் அன்றைய நாள் முழுக்க வயிற்றில் பாரம் குறையாமல் நெருடிக்கொண்டே இருக்கும் நாம் வேலை செய்யும் போதும் முக்கியமான நேரங்களிலும் மலம் வருவது போன்ற உணர்வினை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.   இந்த பிரச்சினையை நீக்கத்தான் தினமும் இரவு உறக்கத்திற்கு முன்னர் கடுக்காய்ப் பொடி கலந்த திரிபலா சூரணத்தை சாப்பிடவேண்டும்.  காலையில் எழுந்தவுடன் வயிற்றில் இருக்கும் கழிவுகள் முழுவதும் வெளிவந்துவிடும்.

3. தான்றிக்காய், இதன் நோக்கமே மனித உடலில் வெப்பத்தைக்குறைத்து முடி பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பதுதான்.

இத்தனையும் கலந்துள்ள திரிபலா சூரணத்தை தினமும் சாப்பிட வேண்டும் நமக்கு தேவையான இளமை நம்மை விட்டு எங்கும் போகாது…பதின்ம வயதில் உள்ள நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.