கொள்ளு பருப்பின் மகத்துவம்-உடல் இளைக்க-உடல் பருமன்-ஒல்லியாக

images (81)
images (81)

ஊற வைத்த கொள்ளு

குதிரைக்கு மிஞ்சுமா கொள்ளு! என்ற பழமொழிகளை கேட்டிருப்பீர்கள் உண்மைதான் குதிரைக்கு கொள்ளை ஏன் கொடுக்கின்றார்கள் என்று தெரிகின்றதா குதிரை நிறைய தீனி சாப்பிட்டு கொழுத்துப்போய் இருக்கும் கொழுத்த குதிரை பார்க்க நெகு நெகு என்று இருந்தாலும் அது சவாரிசெய்கையில் ஓடுவதற்கு சிரமப்படும் அதனால் தான் கொள்ளைக் கொடுப்பார்கள் கொள்ளு குதிரையின் கொழுப்பை கரைத்து அதை சத்தாக மாற்றிவிடும்.  இதனால் குதிரையின் உடல்நலம் பாதுகாக்கப்படும்.

இந்தக் காரணத்தால் தான் குதிரைக்கு மிஞ்சுமா கொள்ளு என்று கூறுகின்றார்கள்…. ஒரு குதிரை கொள்ளுவின் பயனை அறிந்து வைத்திருக்கின்றது ஆனால் நாம் அதை அறியாமல் இருக்கின்றோம் இனிமேல் அறிந்து கொள்வோம்.

கொள்ளுவை நிறைய விதமாக சாப்பிடலாம் அதில் சிறந்த வழி வேகவைத்து உப்பு அல்லது தாளிதம் செய்து சுண்டல் போல் சாப்பிடுவதுதான்.  வேக வைத்து வடித்த தண்ணீரை கீழே கொட்டிவிடாமல் அதை ரசம் வைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

இதில் நல்ல மாவுச்சத்து உள்ளது கொள்ளுப்பருப்பை நன்றாக வேக வைத்து அதனை வடிகட்டி வந்த நீரை சிறிது மிளகு மற்றும் துளசி இலைகளை கிள்ளிப்போட்டு அருந்தினால் வெகு நாட்களாக உள்ள கபம் மற்றும் சளி ஆகியவை உடனடியாக குணமடைந்துவிடும்.

கொள்ளை நன்றாக தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் உறுப்புகளை பலப்படுத்தும்.  சிறுநீர் அதிகப்படுத்தி கற்களை கரைத்து வெளியேற்றும்.  கொள்ளை நன்றாக வறுத்து அதில் சிறிது உப்பு மற்றும் வரமிளகாய், உப்புடன் கலந்து அரைத்து வைத்துக்கொண்டால் கொள்ளுப்பொடி தயார். இதை வைத்து தினமும் சாதத்தில் எண்ணையும் கொள்ளுப்பொடியும் கலந்து சாப்பிடலாம்.

பெண்களுக்கு கொள்ளு இன்றியமையாதது.  மாதவிடாய்க் காலம் மற்றும் அதிக வெள்ளைப்போக்கு போன்ற காலத்தில் கொள்ளை வேகவைத்து மேற்சொன்னவாறு நன்றாக அரைத்து கஞ்சிப்போல் கடைந்து சிறிது உப்பு மற்றும் தொட்டுக்கொள்ள எலுமிச்சை ஊறுகாய் வைத்துக்கொண்டு சாப்பிட்டுவந்தால் உடல் பலம் ஏற்படும்.

வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொறுமல், கண்நோய்கள் போன்றவற்றை கொள்ளுக்கஞ்சி குணமாக்கும். நான் மிக குண்டாக இருக்கின்றேன் என்னோட இடையையும் குறைக்க முடியல என்று வருத்தப்படுவோர் கண்டிப்பாக தினமும் மேற் சொன்னவாறு கொள்ளுவை நன்றாக காய்த்து வடிகட்டிய கஞ்சியுடன் கொள்ளை நன்றாக மத்து கொண்டு கடைந்து சிறிது உப்பு போட்டு தினமும் வீணாக்காமல் குடித்து வரவும் கண்டிப்பாக உடல் எடை குறைந்து விடும்.

சாதரண ரசத்தில் சிறிது கொள்ளு பொடியை கலந்தால் அது கொள்ளு சூப் ஆகிவிடும் இதையும் குடிக்கலாம்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.