பாடிபில்டிங் உணவு வகைகள்- சைவம் மற்றும் அசைவம்

vegetarian-bodybuilding

பாடிபில்டிங் என்றதும் நம் எல்லோருக்கும் நினைவில் வருவது அழகான சிக்ஸ்பேக்குகள் மற்றும் அம்சமான உருண்டு திரண்ட தோள்கள் என மயக்கும் உடல்தான். அர்னால்டு, ராக், ஜான்சீனா என பலரும் நினைவுக்கு வருவார்கள் நாமும் செய்தால் என்ன என்று நினைப்புதான் வரும்.  ஆனால் செய்ய தோது வராது உண்மைதான் இந்த பாடிபில்டிங் என்பது ஒரு கலை அது சிறுவயதில் ஆர்வத்துடன் பயில வேண்டியது.  குடும்பஸ்தர்களுக்கு இது சரிபட்டு வராது என்று ஒதுங்கி விடுகின்றார்கள்.

நாம் ஒன்றும் பாடிபில்டிங் போட்டியில் கலந்து கொள்ளப்போவதில்லை மிகப்பெரிய பாடிபில்டிங் மாஸ்டர்கள் அனைவரும் 30 வயதுக்கும் மேல் தான் ஜிம்முக்கே போயிருக்கின்றார்கள் அதனால் பாடிபில்டிங்குக்கு வயது தடையில்லை.

ஏற்கனவே நமது இணையதளத்தில் நிறைய செய்திகளை விட்டிருக்கின்றோம்.  அதில் உண்ணும் உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சிகள் ஆரம்ப கால உடற்பயிற்சிகள் என்று நிறைய உள்ளன. படிக்க இங்கே செல்லவும்.

இப்போது மேலே படித்துவிட்டு கீழே வாருங்கள் பின்னர்.  அதற்கான உணவுவகைகள் நிறைய உள்ளன.

அசைவப்பிரியர்கள் தினமும் முட்டையை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.  நன்றாக வேகவைக்கப்பட்ட ஆட்டிறைச்சி வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடுங்கள். எக்காரணம் கொண்டும் மாட்டிறைச்சி வேண்டாம்.  உடம்பு ஏறும் என்பது என்னவோ உண்மையாக இருக்கலாம் ஆனால் விபரீதத்திற்கு எங்கள் இணையம் பொறுப்பல்ல.

ஸ்டிராய்டு எனப்படும் ஊசி (தசை வேகமாக வளர மருந்து) யை போட்டுக்கொண்டு தசையை வளர்த்துவந்தால் அதனால் நிறைய கெடுதல்கள் நமக்கு வரும். சீக்கிரமே இதய நோய் வந்து இறந்துவிட்டார்கள் இதைப்பயன்படுத்திய பெரிய பாடிபில்டர்கள்.  மீன் உணவு வகைகள் தான் உங்கள் அருமை சாசனம்.

புரோட்டின் மற்றும் விட்டமின் சத்துக்கள் மிக முக்கியம் அவைகள் இருந்தால் போதும் நமக்கு நிறைய எடையை தூக்கும் அல்லது தசையை வளரவைக்கும் அளவுக்கு சக்தி உடலுக்கு கிடைத்துவிடும்.

அதனால் நிறைய புரோட்டின் பவுடர்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றது.  முட்டையை சாப்பிட சொன்ன காரணமே அதில் உள்ள புரோட்டின் சத்துக்காகத்தான்.  நாங்கள் கொடுத்துள்ள உடற்பயிற்சிகளை செய்து கொண்டே இந்த உணவுகளை சாதரண உணவோடு சாப்பிடுங்கள் போதுமானது.

சைவப்பிரியர்கள் – நமக்கெல்லாம் ஜிம்முக்கு லாய்க்கு இல்லை ”நாங்க தயிர் சாதம் சாப்பிடறவா, அது மாமிசம் சாப்பிடறவா போற இடம் அங்க எங்களவாக்காளுக்கு என்ன வேலை” அப்படின்னு ஒதுங்கிடாதீங்க… உடல் அனைத்தும் ஒன்றுதான் உணவுப்பொருட்கள் வேறுதான் ஆனால் அதில் உள்ள சத்துக்கள் எல்லாம் ஒன்றுதான் இறைச்சியாகும் ஆடு புல்லை தின்னுதான் வளர்கின்றது.

சைவத்திற்கு

1. கொண்டைக்கடலையில் இறைச்சியின் சத்துக்கள் உள்ளது.

2. பச்சைப்பயிறில் விட்டமின் சத்துக்கள் நிறைய உள்ளது.

3. கோதுமையில் நிறைய புரதம் கலந்துள்ளது.

4. தினமும் சப்பாத்தியை சாப்பிட்டாலே போதுமானது.

5. வேகவைத்த(தோல்நீக்காமல்) உருளைக்கிழங்கில் அதிகஅளவில் தசையை வளர்க்கக் கூடிய சத்துள்ளது.

6.  தினமும் 10 உலர்திராட்சையை ஊறவைத்து சாப்பிடுங்கள் உயிர்ச்சத்துக்கள் நிறைய உள்ளது.

7. வசதி உள்ளவர்கள் தினமும் 10 பாதாம் பருப்பினை சாப்பிடலாம்.

8. வேர்க்கடலை (வெள்ளை) உள்தோல் நீக்காமல் சாப்பிடவேண்டும்.

10. தினமும் ஒரு தேக்கரண்டி தேனை பாலில் கலந்து குடிக்கலாம் சதை புஸ்டியாகும்.

11. எல்லாவற்றையும் விட உளுந்து எலும்பு மஜ்ஜைகளை வலுவாக்கும். எலும்பு வலு இல்லை என்றால் கண்டிப்பாக ஜிம் பக்கம் போக முடியாதுங்க.  அதனால் உளுந்து கஞ்சி வைத்து தினமும் குடிக்க வேண்டும். பலனை நான் சொன்னால் தெரியாது உணர்வீர்கள்.

12. தீவிர பயிற்சியில் ஈடுபடும் போது கண்டிப்பாக ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை பசிக்க ஆரம்பிக்கும் உடனே எண்ணை பலகாரத்தை வாயில் நுழைக்காமல் தண்ணீர் மற்றும் வாழைப்பழம் அல்லது பேரிச்சை போன்ற பழங்களை சாப்பிடவேண்டும்.

13. மீன் மாத்திரைகள் தினமும் இரண்டு சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் ஒரு மீனைச் சாப்பிட்ட சக்தியை தருகின்றன.

இந்த உணவுத்திட்டத்தில் எது உங்கள் விருப்பமோ அதைப்பின்பற்றி பயிற்சி செய்து வரவும் வெற்றி நிச்சயம்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.