விஞ்ஞானியாகும் படிப்புக்கு அதிக மவுசு இருக்கும்

IISER-BS-MS-700px

ஒரு காலத்தில் ஆசிரியர் படிப்புக்கும் வணிகப்படிப்புக்கும் அதிகமாக வரவு இருந்தது. ஆனால் இப்போது டாக்டர் மற்றும் எஞ்சினியர்களுக்கே அதிக வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே வருங்காலத்தில் நல்ல படிப்பு படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும். அதே சமயம் நல்ல வரவேற்பும் இருக்கும்.

எனவே அறிவியல் துறையில் அதிக நாட்டம் உள்ளவர்கள் விஞ்ஞானியாக மாறாலாம் அவர்களுக்கு பின்னாளில் நல்ல வரவேற்பும் இருக்கும். அது BSMS என்ற ஐந்தாண்டு படிப்பான இது உள்ளது.

மேலும் ஒரு நற்செய்தி இந்தப்படிப்பு Dual Degree எனவே அதை நேரடியாக பிளஸ் 2 முடித்தவர்கள் அதை நன்றாக படிக்கலாம்.  அதில் நேரடியாக நுழைவுத்தேர்வு எழுதி சேரலாம். இந்திய வள அமைச்சகத்தின் கீழ் IISER (இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் எஜீகேசன் அன்ட் ரிசர்ச்) கல்வி நிறுவனம் ஒன்று செயல்படுகின்றது.

இது பெரிய நகரங்களான போபால், கொல்கத்தா, மஹாலி, புனே மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம் ஆகியவற்றில் இயங்கிவருகின்றது.

இந்த கல்வியைக் கற்க நிறைய நாட்டம் அறிவியலில் இருக்க வேண்டும்.  மேலும் வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் போன்ற பாடத்தில் அதிக அறிவு பெற்றிருக்கவேண்டும்.

இக்கல்வியானது ஐந்தாண்டுகள் தொடர்ந்து கற்பிக்கப்படுகின்றது. அதில் முதல் இரண்டாண்டுகள் அறிவியல் சார்ந்த படிப்புகள் ஆகும்.  அடுத்த ஆண்டுகளில் விஞ்ஞானம் கற்பிக்கப்படுகின்றது. இதைப்படித்தவர்கள் விஞ்ஞானியாகவும் அறிவியல் அறிஞர்களாவும் திகழலாம்.   புதிய கண்டுபிடிப்புகள் செய்து வானவியல் அறிஞர்களாக வளரலாம்.

இந்த படிப்பு முடிக்க நிறைய ஸ்காலர்ஷிப் மற்றும் உதவித்தொகையாக நிறைய வசதிகள் கொடுக்கின்றனர்.  இதைப்பற்றி இன்னும் தகவல் பெற கீழ் இணைக்கப்பட்டுள்ள இணையத்தில் செல்லவும்.  இந்தப்படிப்பு படிக்க மாதம்தோறும் 5,000 ரூபாய் கல்வி உதவித்தொகை என ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாயும் ஆராய்ச்சி செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் அரசு நிதி அளிக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் முதல் இதற்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் அனுப்பலாம். http://www.iser.admission.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து மேலும் தகவல் தெரிந்து கொள்ளலாம்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.