லிப்ட்டில் தலைசிக்கி பரிதாபமாக குழந்தை பலி

1447746934-0364

ஆந்திர மாநிலத்தில் பரிதாபமாக ஒரு சிறிய வயதுக் குழந்தை லிப்ட்டில் சிக்கி இறந்தது.

ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீ சைதன்யா என்ற தனியார் பள்ளியில் ஜெயினப்(3) என்ற பெண்குழந்தை படித்து வந்தது.  இன்று காலையில் பள்ளிச்சென்ற ஜெயினப் மற்றும் மற்ற குழந்தைகளை வகுப்பாசிரியர் லிப்ட்டில் ஏற்றி முதல் தளத்தில் இருந்து மூன்றாம் தளத்திற்கு செல்லும்போது ஜெயினப்பின் தலை கதவில் சிக்கிக் கொண்டது.

இதை அறியாமல் லிப்ட் மேலேற தலை சிக்கிய குழந்தை பரிதாபமாக இறந்து போனது.  இந்த அசம்பாவிதத்துக்கு முழு பொறுப்பும் அந்த ஆசிரியருடையது தான். மேலும் இவ்வாறு இறந்து போன குழந்தையின் தாயார் மற்றும் பெற்றோர்கள் கதறிஅழுதனர். போலிஸார் அந்தப்பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். சின்னஞ்சிறு குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பள்ளியை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.