நன்றாகத் தூங்கினால் தான் உடல் நலமாகும்- தூக்கத்தின் முக்கியத்துவம்

download (93)

தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடலின் அர்த்தம் தூங்கவே கூடாது என்று கூறவில்லை. பகலில் தூங்கிவிட்டு வெறுமனே பொழுதைக்கழிக்க வேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள்.  தூக்கம் மட்டும் இல்லையென்றால் மனித வாழ்வு இயந்திரம் ஆகிவிடும்.  இயந்திரத்தை கூட தினமும் ஒய்வு கொடுக்காமல் இயக்கிவிட்டால் உடனடியாக அதன் பாகங்கள் தேய்ந்து பழுதாகிவிடும்.  இயந்திரத்திற்கு வேறு பாகங்கள் மாற்றிவிடலாம்.  ஆனால் மனிதனுக்கு?

அதனால் தான் ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளில் எட்டு மணிநேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  இப்போது உள்ள வர்த்தக உலகத்தில் இரவு நேர வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். பகலில் உறங்கிவிட்டு இரவில் வேலை செய்கின்றனர்.  இது தவிர்க்க முடியாதது என்றாலும் இதுவும் குறைந்தது எட்டு மணிநேரம் தூங்கவேண்டும்.

நம் முன்னோர்கள் முன் தூங்கி முன் எழுவார்கள் அதாவது ஏழு முதல் எட்டு மணிக்கு எல்லாம் தூங்கிவிட்டு மறுநாள் காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வேலைக்கு சென்றுவிடுவார்கள்.  இதனால் நிம்மதியாக வேலை செய்துவிடுவார்கள்.

மதிய நேர உணவை உண்டப்பின் சிறிது நேரம் குட்டித்தூக்கம் போடுவார்கள்.  இது உடலுக்கு ரொம்ப நல்லது தான் ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.  தனியார் அலுவலகத்தில் அதற்கு அனுமதியிருக்காது.  அதை விட்டுவிடுவோம்.

நன்றாக எட்டு மணிநேரம் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்….

பொதுவாக இரவு எட்டு மணியில் இருந்து மறுநாள் காலை ஆறு மணிவரைக்கும் உறங்கவேண்டும் ஆனால் எல்லோருக்கும் அப்படி நேரம் அமையாது.  இதனால் இரவு பத்து மணி முதல் மறுநாள் காலை ஆறு மணிவரை கண்டிப்பாக உறங்க வேண்டும்.  இதனால் உடல் உறுப்புகள் முழுவதும் ஒய்வெடுக்கும் பின்னர் அடுத்த நாள் வேலைக்கு மீண்டும் நன்றாக கிளம்பிவிடும் மனமும் உடலும் உற்சாகம் நிரம்பியிருக்கும்.

சிலர் வேலைக்குச் செல்லும் போது பேருந்தில் உறங்கிக்கொண்டே செல்வர் இது வேலைக்கு செல்லும் முன்பு தூங்குவதால் அலுவலகத்தில் உறக்கம் வராமல் தடுக்கும்.

துக்கம், ஏக்கம், கோபம், கவலை, சுயசிந்தனை மற்றம் மன அழுத்தம் ஆகியவை இந்த உறக்கத்தாலே சரிசெய்யப்படும்.  இதில் இருந்த மனதை ஆசுவாசப்படுத்தவும் முடிவெடுக்கவும் கண்டிப்பாக உடல் ஒய்வு தேவை.

சரியாக தூங்கவேண்டும்.

 • நன்றாக காலை நீட்டிக்கொண்டு அடுத்தவரின் மேல் கையோ காலோ படாமல் உறங்க வேண்டும்.
 • போர்வையை தலைவரைக்கும் போர்த்திக்கொண்டு உறங்கக்கூடாது.
 • குழந்தைகளோடு தூங்கும் போது குழந்தைகள் பெரியவர்களுக்கு நடுவில் தான் உறங்க வேண்டும்.  (அதனால் அவர்கள் உருண்டு படுக்கும் போது கட்டிலில் இருந்து விழுந்துவிடுவர்)
 • மெத்தை மற்றும் விரிப்பின் மீது தூங்கவேண்டும்.
 • தலையணை மென்மையாகவும் அதிக உயரமில்லாமலும் இருக்க வேண்டும்.
 • பௌர்ணமி மற்றும் அமாவசை நாட்களில் மொட்டை மாடியில் உறங்கக்கூடாது.(நிலவின் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும் நாட்களில் வெளியில் உறங்கக்கூடாது)
 • வடக்கு மற்றும் தெற்காக காலை நீட்டி உறங்கக்கூடாது. (புவியின் காந்த விசை வடக்கு தெற்காக இருப்பதால் நம் இரத்த ஓட்டம் தலைக்கு செல்லாது.)
 • மரத்தின் அடியில் இரவில் உறங்கக்கூடாது.  (இரவில் மரம் கரியமில வாயுவை வெளிவிடும் இதனால் மனிதர்கள் அதை சுவாசிக்க நேரிடும் போது மூச்சுத்திணறல் ஏற்படும்.)
 • தூங்கும் போது தலையில் தே.எண்ணெய் சிறிது தேய்த்துக்கொண்டு தூங்கினால் நன்றாக தூக்கம் வரும்.
 • சூடான டீ, காபி மற்றும் நிறைய தண்ணீரை உறங்கும் 1 மணிநேரத்திற்கு பின்னர் அருந்த வேண்டாம். இது சிறுநீரை அதிகப்படுத்தும் இதனால் தூக்கம் கெட்டுவிடும். குழந்தைகளுக்கு இவைகளை கொடுப்பதால் அவர்கள் படுக்கையை இரவில் நனைத்துவிடுவார்கள்.
 • சாப்பிட்டவுடன் உறங்க வேண்டாம்.  சிறிது காலார நடந்துவிட்டு உறங்க வேண்டும். காலையில் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உறங்கும் சில நேரத்திற்கு முன்னர் சீரகம் ஒரு டீ-ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு மென்று விழுங்கவும்.  இல்லையேல் ஒரு வாழைப்பழம் அல்லது ஒரு சிட்டிகை கடுக்காய் அல்லது திரிபலா சூரணப்பொடியை சாப்பிட்டு வரவும்.
 • நிம்மதியாக தூங்க இரவு வணக்கங்கள் கூறிவிட்டு கடவுளை வணங்கிவிட்டு தூங்கவும்.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.