உடல் உறுப்புகள் சுறு சுறுப்பாக கூழாங்கற்களின் மேல் தினமும் நடந்திடுங்கள்.

download (92)

நமது கால்களுக்கு நாம் ஒய்வு கொடுக்காமல் இருக்கின்றோம் இதனால் கால்கள் கொஞ்சம் வயதாகியவுடன்(?) மூட்டு வலி மற்றும் கால் வலி குதிகால் வலி என்று அனைத்து வலிகளும் அனைத்து வழிகளிலும் வந்து விடுகின்றது.

நாம் போடும் செருப்பு அல்லது ஷூக்கள் கால்களை இருக்கமாக கட்டிக்கொண்டு நாம் நடக்கும் போது உருவாகும் அதிர்வினை ஏற்கின்றன.  அந்த அதிர்வு நேரடியாக கால்களில் பட்டு வலியை ஏற்படுத்துகின்றன.  வெறும் கால்களில் நடக்கும் போது பாதம் தரையில் நன்றாக பதிந்து விடுகின்றது. மேலும் பாதத்தின் தசைகள் மெதுமெது வாக இருப்பதால் அந்தத்தசைகள் நடக்கும் போது உள்ளாகும் அழுத்தம் மற்றும் அதிர்வை தாங்கிக்கொள்கின்றன.  இந்தப் பாதத்தில் உள்ள நரம்புகள் ஒவ்வொன்றும் நமது உறுப்புகள் மற்றும் பாகங்களின் நரம்புகளைக் கொண்டுள்ளது.

இதனால் செருப்பின்றித்தான் இனிமேல் நடக்கவேண்டும் என்றால் அவ்ளோதான் கிருமிகள் பாதம் வழியாக உள் நுழைந்து உடலுக்கு கெடுதலை தரும். நாம் தினமும் சிறிது நேரம் கூழாங்கற்கள் நிரம்பிய களத்தில் அல்லது ஆற்றோரமாக நிரம்பியிருக்கும் கூழாங்கற்களில் செருப்பின்றி நடந்து வருவதால் கால்களில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும்.

நம் வீட்டிலேயே ஒரு அறையில் கப்பி மணலை நிரப்பி தினமும் நடந்து வரலாம் இதனால் மிக உடலுக்கு நல்லது.  இது போன்று கூழாங்கற்கள் வசதி கிடைக்காதவர்களுக்கு செருப்பிலேயே கூழாங்கற்கள் இருப்பது போன்றும் செருப்பில் முட்டு முட்டாகவும் (அங்கு பங்க்ஸர்) தோன்றுவது போல் செருப்புகள் உள்ளது.  அதை அணிந்து கொன்று காலார 10 நிமிடம் தினமும் நடப்பதால் உடலுக்கு சிறிது ரிலாக்ஸ் மற்றும் கால்களுக்கு மசாஜ் கிடைத்த மாதிரியும் இருக்கும்.

வெகுநேரம் நின்ற நிலையில் வேலை செய்பவர்களுக்குத்தான் காலில் வலி மற்றும் மூட்டு வலி வேகமாக வந்து விடுகின்றது. இதனால் நிற்பவர்கள் விரைப்பாக மூட்டியை நேராக்கி நிற்காமல் சற்றே இந்தப்பக்கம் சாய்ந்தவாறும் சிறிது நேரம் கழித்து அந்தப்பக்கம் சாய்ந்தவாறும் முட்டியை தளர்த்தி நின்றால் கால் வலி வராது….

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.