வரப்போகின்றது புதிய ”பிளாக் பாக்ஸ்”

5344684-3x2-940x627

பிளாக் பாக்ஸ் என்பத எல்லாருக்கும் தெரிந்திருக்கும் அது விமானத்தின் பயணத்தின் போது அங்கு நடக்கும் நடவடிக்கைகளை மற்றம் விமானம் பறக்கும் உயரம் மற்றும் வெப்ப அழுத்தம்.  கடைசி இரண்டு மணி நேர உரையாடல்கள் ஆகியவை பதிவாகியிருக்கும்.

இது உண்மையில் ஆரஞ்சு  நிறத்தில் இருக்கும். கருப்பு பெட்டி கருப்பு நிறத்தில் இருக்காது. இது விமானத்தின் வால்ப்பகுதியில் தான் இருக்கும். அதில் மேக்னடிக் டிஸ்க் அல்லது டேப் இருக்கும். விமானத்தில் கடைசிநேரத்தில் உள்ள நிகழ்வுகள் பதிவாகியிருக்கும்.

_80002275_airasia_black_box_20143112_624_v2

பிளாக் பாக்ஸ்-ன் உட்புறத்தோற்றம்

மிகத்தொலைவில் இருந்து பார்த்தாலும் இது கண்களுக்கு நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக இளஞ்சிவப்பு (ஆரஞ்சு) வண்ணம் பூசப்பட்டிருக்கும்.  மிகவும் பலம் வாய்ந்த விபத்துக்கள் நடந்தாலும் அதிலிருந்து பிளாக் பாக்ஸ் தப்பித்துவிடும்.

ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை விமானத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவுசெய்யக் கூடியது. இதை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானி டேவிட் வாரன் என்பவர் 1953 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அதற்கு முன்னரே ரெக்கார்டர் இருந்தது ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத்துமாறு இல்லை.  ஒரு முறை பயன்படுத்தியப்பின்பு புதிய ரெக்கார்டர் மாற்றப்படவேண்டும்.  டேவிட் வாரன் கண்டுபிடித்தது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது.

டிஜிட்டல் Signal களாகத்தான் தகவல்கள் பதிவாகும். நிறைய விபத்துக்களில் பிளாக் பாக்ஸ் முக்கியப்பங்காற்றிவருகின்றது.  இந்த தகவல்களால் எளிதாக விமானத்தை எந்த மாதிரியான விபத்து தாக்கியது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இன்னமும் பழமையான முறையே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பிளாக் பாக்ஸைவிட பயணிகளின் கைகளிலேயே உயர்தொழில்நுட்ப செல்போன்கள் இருக்கின்றது.  இதனால் சர்வதேச விமான கூட்டமைப்பில் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய பிளாக் பாக்ஸ் வரவேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.  இதனால் இனிமேல் புதிய தொழில்நுட்பத்துடன் பிளாக் பாக்ஸ் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.