11 மாநில மொழிகளில் ஆண்ட்ராய்ட்

android_os_version1

ஆன்டிராய்டு சந்தையில் அதிகமாக விற்பனையாகும் மொபைல் போன்கள் கொண்டுள்ள இயங்குதளம்(OS).  மிகுந்த வேகமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள.  கூகுளில் நிறுவன தலைவரான சுந்தர்பிச்சை இன்னும் அதிக வசதிகளை ஆன்டிராய்டில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இப்போது உள்ள ஆன்டிராய்டு ஆங்கில மொழிப்பெயர்ப்பில் உள்ளது.  அதை நிறைய மொழிகளில் வெளிவிடுவதால் இன்னும் அதிகமாக மக்களால் பயன்படுத்தப்படும்.  இந்த ஆன்டிராய்டு இயக்க அமைப்பு மொபைலுக்கு மட்டுமின்றி LED Screen, Watch, AC, என அனைத்து மின் சாதனங்களையும் ஒரு இயக்க அமைப்பு மூலம் கொண்டு வருதல் தொடர்பாக புதிய முயற்சிகளை செய்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் திட்டத்தின் வழியாக இந்த தொழில்நுட்பம் நன்றாக வளர இந்திய மொழிகளிலும் ஆன்டிராய்டு இயக்க அமைப்பு உருவாக்க வேண்டும்.  இதன்படி சுந்தர்பிச்சை கூறுகையில் இந்திய மொழிகளில் 11  மொழிகளில் ஆன்டிராய்டு மொழி உருவாக்கப்படும் அதில் குஜராத்தியும் ஒன்று.

ஏற்கனவே அறிவித்தபடி, கூகுள் நிறுவனம், இந்தியாவில் ரயில் நிலையங்களில் இலவச வை பி இணைய இணைப்பினை வழங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 100 நிலையங்களில் இந்த இணைப்பு கிடைக்கும் என்றும், அதன் மூலம், நாளொன்றுக்கு ஒரு கோடி பேர் பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், மேலும் 400 ரயில் நிலையங்களுக்கு இது விஸ்தரிக்கப்படும். இது செயல்படுத்தப்படுகையில், இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான வை பி இணைப்பு இதுவாகத்தான் இருக்கும். இந்த திட்டத்தில், கூகுளுடன் RailTel எனப்படும் இந்திய நிறுவனமும் இணைகிறது. ஏற்கனவே, இந்நிறுவனம் 63,500 கி.மீ. தூரத்திற்கு தன் வலைப்பின்னலை ஏற்படுத்தியுள்ளது.

இது 5,000 ரயில் நிலையங்கள் வழியே செல்கிறது. இதுவரை, 32,500 கி.மீ தூரத்திற்கு பைபர் நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 29,500 கிமீ தூரத்திற்கு இந்த நெட்வொர்க்கிற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.