இசை நோயாளியா நீங்கள் இதைப்படிங்க முதலில்

images (73)

இசையை விரும்பாதவர்கள் யாருமில்லை கொடிய மன்னன் கூட நீரொ நகரம் எரியும் போது பிடில் வாசித்தான் என்று கதைகள் உண்டு… இனிமையான இசை மட்டும் இசைக்கருவிகளை நேரடியாக இசைத்து பெறும் இசை போன்றவைகள் காதுகளுக்கு இனிமையானது மற்றும் மனதுக்கும் இனிமையானதாக இருக்கும்.

ஆனால் தற்போது உலகத்தில் உள்ள இசை கலாச்சாரம் முழுவதும் மாறிவிட்டது மென்மையான இசைப்போய் மிரட்டலான இசைவந்துவிட்டது… அதற்கேற்ப அதிக சக்திவாய்ந்த ஸ்பீக்கர் மற்றும் சக்திவாய்ந்த MP3 player கள்  உள்ளது இது தவறான ஒன்றாகும்.

நம் காதுகளுக்க ஒரு குறிப்பிட்ட ஒலிதிறன் (டெசிபல்) மேல் கேட்கும் திறன் உள்ளது.  அதற்கு அதிகமானால் காதுக்குள் இருக்கும் சவ்வினால் தாங்க முடியாது இது உண்மை…

அதிகமாக நம் இளைஞர்களுக்கு இப்போது காதுக்குள் மாட்டிக்கொள்ளும் இயர்போன் பழக்கம் இருந்து வருகின்றது… இது மிகவும் அபாயகரமான விசயம். இதனால் மேலும் பிரச்னைக்குள்ளாகி காதுகளில் வீக்கம் ஏற்பட்டு விடும்.  தொடர்ந்து நாம் சிறிதளவு வால்யும் வைத்துக்கொண்டு கேட்டுவந்தாலே எட்டு மணிநேரத்தில் காது கேட்கும் திறன் குறைந்துவிடும்…

முன்பெல்லாம் இலைச்சருகுகள் நகரும் சத்தம் கூட தெளிவாக கேட்டிருக்கும் ஆனால் இயர்போனில் இசை கேட்டுப்பழகியவர்களால் இந்த மென்மையான சத்தத்தை உணரக்கூட முடியாது. இது தான் உண்மை…

காதுக்குள் மாட்டும் இயர்போன்களை தவிர்த்துவிட்டு தரமான ஹெட்போன்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.  இதனால் காதில் ஏற்படும் செவிட்டுத்தன்மையை குறைக்கலாம்.

வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.