கால்பால் குழந்தைக்கு ஆபத்தானதா…?

download (87)
சிறிய வயதில் நாமும் கேள்விப்பட்டிருப்போம் நம் குழந்தைக்கும் இப்போதும் பரிந்துரைப்போம் என்ன வென்றால் குழந்தைக்கு காய்ச்சல் என்று கேள்விப்பட்டால் உடனே மெடிக்கலுக்கு போய் ”அண்ணே ரெண்டு கால்பால் மாத்திரை கொடுங்க” அப்படி கேட்டு வாங்கி குழந்தைக்கு கொடுத்து காய்ச்சலை தற்காலிகமாக விரட்டிவிட்டோம் என்ற நிம்மதியில் மற்ற வேலைகளை பார்க்க சென்றவிடுவோம்.
உண்மைதான் கால்பால் (பாரசிட்டோமால்) மாத்திரைகள் காய்ச்சலை குணப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  ஆனால் அந்தே மருந்தே பிள்ளைகளுக்கு பின்னாலில் பிரச்னையை ஏற்படுத்திவிடுகின்றது.
இந்த ஆய்வினை நியூசிலாந்து நாட்டினைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழக ஆசிரியர் நடத்தி ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.  பாரசிட்டோமால் மாத்திரைகளை அதிகம் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களுக்கு ஆஸ்துமா நோய் பின்னாளில் ஏற்படுகின்றது.
மேலும் குழந்தைகளுக்கு அலர்ஜி போன்றவைகளும் ஏற்படுகின்றன….இது குறித்து இன்னும் ஆய்வுசெய்வதாக ஜூலியன் தெரிவித்துள்ளார்.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.