பரோட்டா உடலுக்கு தீங்கானதா…..?

Capture12
நம்மவர்களுக்கு பரோட்டாவின் மீது ஒரு அலாதி விருப்பம் தான்.  மைதாவை அடித்து துவைத்து கல்லில் போட்டு அதற்கு ஏதுவாக கார சாரமாக தேங்காய்க் குருமா கூட தக்காளிச் சட்னி அப்டின்னு சொல்லும்போதே நாவில் எச்சில் ஊறும்…..மதிய உணவாக பரோட்டா சாப்பிடலாமா என்று தோன்றும் அதான் கெட்டப் பழக்கம் அதைச் சொல்லவே இந்த கட்டுரை.
மைதா மாவு கோதுமையில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றது.  நேரடியாக கோதுமையைப் பயன்படுத்தி செய்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தருகின்றது என்பதில் இம்மியளவும் சந்தேகம் இல்லை.  ஆனால் பிரச்சினை இந்த மைதாவில் தான்.  நன்கு நைசாக கோதுமையை அரைத்தெடுத்து அதில் பென்சாயின் என்ற வேதிப்பொருளை சேர்ப்பார்கள்.
இது கோதுமை மாவுக்கு இரப்பர் போன்ற தன்மையை கொடுக்கும்.  இல்லையென்றால் பரோட்டா மாஸ்டர் துவைக்கிற துவையில் மாவு பீஸ் பீஸாகிவிடும். புரிகின்றதா…இந்த மைதா மாவு கலந்து தயாரிக்கின்ற எல்லா பொருட்களிலும் கண்டிப்பாக இந்த வேதிப்பொருள் இருக்கும்.  இது இதய நோயை கொண்டு வரும். தொடர்ந்து 3 மாதங்கள் மைதாவை பயன்படுத்திவிட்டாலே அவனது வாழ்வில் நிச்சயம் இதய நோய்கள் வந்துவிடும்.  அதில் துளியும் சந்தேகம் கிடையாது.
இந்த மைதா உணவுகள் சர்க்கரை நோயை எளிதில் தூண்டிவிடுகின்றன.  இந்த  மைதா மாவு உடலின் சர்க்கரை சத்தினை அதிகப்படுத்துகின்றது… வேண்டுமென்றால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பரோட்டாவை கொடுத்துவிட்டு பின் சர்க்கரை அளவை சோதனை செய்து பாருங்கள் உணர்வீர்கள்….
இனிமேல் பரோட்டா சாப்பிடவேண்டும் என்று ஆசைபட்டால் வயிறு நிறைய தண்ணீர் குடியுங்கள் பரோட்டாவை சாப்பிடாதீர்கள்.  நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.  இது மேல் நாட்டு உணவு. இரண்டாம் உலகப்போரின் போது மைதா மாவுப் பொருட்கள் யுரொப்பாவில் இருந்து நம் ஊருக்கு வந்துவிட்டது அப்படி வந்ததுதான் இந்த மேல் நாட்டு உணவுகளான பரோட்டா, பீட்சா, சாண்ட்விச் எல்லாம்…..
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.