வீட்டின் மேற்கூரையில் விழுந்து நொறுங்கிய விமானம்

அமெரிக்காவில் ஒரு வீட்டின் கூரையின் மேல் சிறிய ரக ஜெட்விமானம் ஒன்று விழுந்து ஒன்பது பேர் பரிதாபமாக இறந்துவிட்டனர்.
அமெரிக்காவைச்சேர்ந்த விமானம் Hawker H25 என்ற டமஸ்டிக் ஜெட் விமானம் ஒன்று வானில் 7 பேர்களை சுமந்துகொண்டு பறந்தது. அது சரியாக விமான நிலையத்தில் அருகில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது விழுந்தது.
அதில் பயணித்துக்கொண்டு வந்த ஏழு பேர் மற்றும் விமானிகள் 2 பேரும் இறந்து விட்டனர். இந்தக் காட்சியை வீட்டின் அருகில் இருந்தப்பெண் புகைப்படம் எடுத்துள்ளார்.
இவர் கூறுகையில் நான் வீட்டில் இருந்த போது திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது நான் பயந்து போய் சன்னல் வழியாக பார்த்தபோது பெரிய விமானம் ஒன்று வீட்டில் விழுந்ததை பார்த்தேன் என்று கூறினார்.
இதைப்பற்றி விமான அதிகாரிகள் கூறுகையில் அதிகமாக உள்ள பனியின் காரணமாக வானில் தெளிவாக காண முடியவில்லை இதனால் தான் விமானம் வழித்தவறி வீட்டின் மீது விழுந்து விட்டதாக கூறுகின்றார்.