விண்ணில் இருந்து மர்ம பொருள் விழுந்த வீடியோ

ufo-wtf-or-wt1190f-to-crash-into-indian-ocean-1
விண்ணில் இருந்து மர்மப் பொருள் ஒன்று புவியை நோக்கி கடந்த சில தினங்களாக வந்துகொண்டிருந்தது இது குறித்து தொடர்ந்து தகவல்களை நமது இணையதளத்தில் வெளிவிட்டு வந்துள்ளோம் தற்போது அந்த மர்மப் பொருள் இலங்கையை அடுத்த தெற்கு கடலில் 13-11-2015 அன்று விழும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.   இதனால் ஆய்வாளர்கள் அதைக்காண்பதற்காக காத்திருந்தனர்.
ஆனால் இலங்கை மற்றும் இந்தியக் கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சரியான மேகமூட்டங்களாக காணப்பட்டதால் காட்சியை காண முடியவில்லை.  இதனை ரசியாவைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் வானில் விமானம் மூலம் பறந்து கொண்டே காட்சியை வீடியோ எடுத்துள்ளார்.
விஞ்ஞானிகள் கூறியது போல கடலில் விழுந்தாலும் வளிமண்டலத்தில் நுழையும் போதே எரிந்துகொண்டே வந்தது. இதனால் எரிந்து தான் கடலில் கரைந்தது.
வித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.